அம்பானி, அதானி எல்லாம் அப்புறம்தான்.. ஒரே ஆண்டில் அதிகம் சொத்து சேர்த்த சாவித்ரி ஜிண்டால்! யார் இவர்
டெல்லி: கடந்த ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்தவர்கள் லிஸ்டில் அம்பானி, அதானி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சாவித்ரி ஜிண்டால் டாப் இடத்தில் இருக்கிறார்.
கொரோனாவுக்கு பிறகு பணக்காரர்கள் தொடர்ந்து அதிகப் பணம் சம்பாதிக்கும் ஒரு சூழலே உலகளவில் இருந்து வருகிறது. அதேபோல இந்தாண்டு பெரும் பணக்காரர்களுக்கு நல்ல ஒரு ஆண்டாகவே இருந்துள்ளது.

அதன்படி இந்தாண்டு அதிகப் பணம் சேர்த்தவர்கள் லிஸ்டில் அம்பானி, அதானி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சாவித்ரி ஜிண்டால் டாப் இடத்தில் இருக்கிறார். யார் இந்த சாவித்ரி ஜிண்டால்.. அவர் எத்தனை கோடி சம்பாதித்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சாவித்ரி ஜிண்டால்: அப்படி இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார பெண்ணாக இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். இவர் நாட்டின் பெரும் பணக்காரர் லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். கடந்த நிதியாண்டில் இவர் மாபெரும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார். அதாவது அதிக நிகர சொத்து மதிப்பு உயர்வைக் கண்ட நபர்கள் பட்டியலில் இவர் அம்பானி, அதானியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு $9.6 பில்லியன் அதிகரித்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் $25 பில்லியனாக உள்ளது. இதன் மூலம் அவர் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறார். ஒரே ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 9.6 பில்லியன் உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானி: மறுபுறம் ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர் மட்டும் அதிகரித்துள்ளது. இருப்பினும், அவர் $92.3 பில்லியன் சொத்து மதிப்புடன் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
யார் இந்த சாவித்ரி ஜிண்டால்: ஹரியானாவைச் சேர்ந்த தொழிலதிபரான சாவித்ரி ஜிண்டால், இப்போது அவரது கணவர் மறைந்த ஓபி ஜிண்டால் நிறுவிய ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருக்கிறார்.
இவர்களின் நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் & பவர், ஜேஎஸ்டபிள்யூ என்ர்ஜி, ஜேஎஸ்டபிள்யூ சா, ஜிண்டால் ஸ்டையன்லெஸ் ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஹோல்டிங் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது. இவருக்கு மொத்தம் 4 மகன்கள் உள்ளனர். அதில் சஜ்ஜன் ஜிண்டால் என்ற நபர் மீது பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது.
அடுத்தடுத்த இடங்கள்: அதேபோல ஒரே ஆண்டில் அதிக சொத்து சேர்த்த நபர்கள் லிஸ்டில் ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் இரண்டாவது இடத்தில் இருந்தார், கடந்த ஒரே ஆண்டில் அவர் $8 பில்லியன் சொத்து சேர்த்தார், அதேபோல டிஎல்எப் நிறுவனத்தின் கேபி சிங் $7 பில்லியன், குமார் மங்கலம் பிர்லா மற்றும் ஷாபூர் மிஸ்திரி ஆகியோர் தலா 6.3 பில்லியன் டாலர்கள் ஒரே ஆண்டில் சம்பாதித்தனர். திலீப் ஷாங்வி, ரவி ஜெய்பூரியா, எம்.பி. லோதா, சுனில் மிட்டல் உள்ளிட்டோரும் அதிக சொத்து சேர்ந்தோர் லிஸ்டில் உள்ளனர்.
மறுபுறம், கவுதம் அதானியின் நிகர மதிப்பு மட்டும் குறைந்துள்ளது. கடந்தாண்டு இந்தியப் பணக்காரர்களில் அவரது சொத்து மதிப்பு மட்டுமே குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு $35.4 பில்லியன் குறைந்து $85.1 பில்லியனாக இருக்கிறது. இருப்பினும் அம்பானிக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பணக்கார இந்தியராக அதானி தொடர்ந்து இருந்து வருகிறார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications