புதிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ரூ.75 காயின்! கருப்பாக இருப்பது ஏன் தெரியுமா? இப்படி ஒரு காரணமா
டெல்லி: இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் 75 ரூபாய் சிறப்பு காயின் வெளியிடப்பட்டது. இந்த காயின் கருப்பு நிறத்தில் இருப்பதற்கு பின் முக்கிய காரணங்கள் உள்ளன.
நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டும்.. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் இன்று 75 ரூபாய் காயின் வெளியிடப்பட்டது. மத்திய அரசு மூலம் வெளியிடப்படும் நினைவு நாணயம் ஆகும்.

பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக அவ்வப்போது நினைவு நாணயம் வெளியிடப்படுவது வழக்கம். இதற்கு முன் பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த நினைவு நாணயங்கள் பொதுவாக புதிய டிசைனில், வேறு மாதிரி இருக்கும்.
மற்ற நாணயங்களுடன் வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்று பல மாற்றங்கள் இது போன்ற நினைவு நாணயங்களில் செய்யப்பட்டு இருக்கும். ஒரு சிறப்பு நிகழ்வு, முக்கிய தலைவர் அல்லது தனிநபர் அல்லது நினைவுச்சின்னத்தை கொண்டாடுவதற்காக நினைவு நாணயம் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல நினைவு நாணயங்கள் உள்ளன.
கருப்பாக இருப்பது ஏன்? : புதிய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காக இதற்கு கருப்பு நிறம் கொடுத்து உள்ளனர்.
இந்த நாணயம் 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவில் இருக்கும். அதன் விளிம்புகளில் 200 சீர்வரிசைகளாக கோடுகளை கொண்டிருக்கும். 35 கிராம் எடை கொண்ட நாணயம் ஆகும் இது. இதில் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவை உள்ளன. உலோகங்கள் கலந்த அலாய் காயின் ஆகும் இது.
இந்த கலப்பு காரணமாக தானாக இது கருப்பு நிறம் கிடைத்துள்ளது. ஆனால் பொதுவாக கருப்பு நிறம் வந்ததும் இதை பாலிஸ் செய்து வெள்ளையாக்குவார்கள். ஆனால் இங்கே அப்படியே கருப்பு நிறத்தில் வெளியிட்டு உள்ளனர். சிறப்பு நாணயம் என்பதால் வேறுபடுத்தி கட்டுவதற்காக இதை கருப்பு நிறத்தில் வெளியிட்டு உள்ளனர்.
நாடாளுமன்ற திறப்பு விழா: டெல்லியில் ரூ 21,000 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் கூடிய செயலகமான சென்ட்ரல் விஸ்டா திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வு தொடங்கி சற்று முன் நடந்து முடிந்தது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் நிறுவப்பட்டது.
மேலும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்றனர். 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணித்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உரைகள் வாசிக்கப்படும்.












Click it and Unblock the Notifications