சைஸ் மாறிய கோல்.. சின்னதா இருக்கே? இரவோடு இரவாக செங்கோல் மாற்றப்பட்டதா? நடந்தது என்ன?
டெல்லி: இன்று திறக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் மாற்றப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வு தொடங்கி சற்று முன் நடந்து முடிந்தது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் பிரதமர் மோடி மூலம் நிறுவப்பட்டது.

மேலும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்றனர். 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணித்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உரைகள் வாசிக்கப்படும்.
செங்கோல் மாற்றப்பட்டதா? : இந்த நிலையில் இன்று திறக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் மாற்றப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது நேற்று ஆதீனம் சார்பாக பிரதமரிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் பெரிதாக வலுவாக இருந்தது.
இன்று பிரதமர் மோடி விழுந்து வணங்கி, பின்னர் கையில் கொண்டு வந்த செங்கோல் வேறு மாதிரி இருந்ததாக பலரும் புகார் வைத்து வருகின்றனர். இன்று வைக்கப்பட்ட செங்கோல் மிகவும் சிறியதாகவும், ஒல்லியாகவும், வலு குறைந்ததாகவும் இருந்தது.
இதை வைத்து செங்கோல் மாற்றப்பட்டுவிட்டதா என்று பலரும் விசாரித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் செங்கோல் எதுவும் மாற்றப்படவில்லை. நேற்று பலரும் புகைப்படங்களில் பார்த்தது மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியா கொடுத்தது அவர் சார்பாக கொடுக்கப்பட்ட செங்கோல் ஆகும். இது உருவம் வேறு மாதிரியானது.
மதுரை செங்கோலுக்கு மீனாட்சி செங்கோல் என்று பெயர். அதுதான் புகைப்படங்களில் வைரலானது. இன்று மோடி கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைத்தது உண்மையான செங்கோல். அது திருவாடுதுறை ஆதீனம் கொடுத்தது. அதில் மேலே நந்தி சிலை இருக்கும். அதுதான் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
திருவாடுதுறை ஆதீனம் செங்கோல் வரலாறு: பலரும் இதை சோழர் கால செங்கோல் என்றும் கூறி உள்ளனர். சோழர் காலத்தில் அரசர்கள் செங்கோல் பயன்படுத்தியது உண்மை. நல்ல ஆட்சிக்கு அறிகுறியாக, மன்னர் ஆட்சிக்கு அறிகுறியாக செங்கோல் பார்க்கப்பட்டது.ஆனால் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டின் செங்கோலுக்கும் சோழர்கள் ஆட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை சோழா செங்கோல் என்று அழைத்தாலும் அதற்கும் இதற்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை.
பாஜக தலைவர்களின் கருத்துக்களின், சுதந்திரத்திற்கு சற்று முன்பு, இந்தியாவின் கடைசி லார்ட்டாக இருந்த மவுண்ட்பேட்டன்தான் நேருவிடம் ஆட்சி மாறுவது தொடர்பாக கூறி உள்ளார். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியர்கள் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைக் குறிக்கும் வகையில் விழா எடுக்க வேண்டும் என்று நேருவிடம் கூறியுள்ளார்.
அப்போது சென்னையில் முதல்வராக இருந்த ராஜகோபாலாசாரியிடம் ஆலோசனை மேற்கொண்ட நேரு, செங்கோல் குறித்து தெரிந்து கொண்டார். சோழர்கள் காலத்தில் இப்படி செங்கோல் இருந்தது. ஆட்சி மாறும் போது அதை மாற்றுவார்கள். அதை இப்போது நாம் பயன்படுத்தலாம். ஆங்கிலேயர் ஆட்சி முடிவிவிற்கு வந்ததன் அறிகுறியாக இதை செய்யலாம் என்று ராஜாஜி குறிப்பிட்டு உள்ளார்.
என்ன ஒரே நாள்ல செங்கோல் கம்பி மாதிரி சின்னதா ஆகிருச்சு 🧐🧐 pic.twitter.com/IGk6TvzZeK
— டான் (@krajesh4u) May 28, 2023
இதையடுத்து அதேபோல் செங்கோலை பெற்றுக்கொள்ள நேரு ஒப்புக்கொண்டுள்ளார். நேரு ஒப்புக்கொண்டவுடன், ராஜாஜி உடனே செங்கோலை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை இந்த செங்கோலை உருவாக்குவதற்கான உதவிக்காக அணுகினார் ராஜாஜி.
அவர்களின் ஆலோசனையின்படி சென்னையைச் சேர்ந்த "வும்மிடி பங்காரு செட்டி" நகைக்கடை நிறுவனம் இந்த செங்கோலை உருவாக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதில் ராஜாஜி செங்கோல் செய்ய சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை. "வும்மிடி பங்காரு செட்டி" நிறுவனத்தின் வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் ஆகியோர் இணைந்து இதை உருவாக்கினார்கள்.
ஆகஸ்ட் 14, 1947 அன்று நடந்த விழாவின் போது, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த செங்கோலை மவுண்ட் பேட்டன் நேருவிடம் கொடுத்தார். ஆனால் இதற்கும் அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேரு வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ் பாடல்கள் பாடப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications