சீனாவின் "மாய வலை.." ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இத்தாலி.. ஜி20-இல் இதை யாருமே எதிர்பார்க்கலயே! ட்விஸ்ட்
டெல்லி: சீனா அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவுத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு ப்ராஜெக்ட்டில் இருந்து இத்தாலி விலகத் திட்டமிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் ரொம்வே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற்றது. உலகின் டாப் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த உச்சி மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் தான் ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த ஜி20 அமைப்பில் நிரந்தரமாக இணைந்தது.

இதில் வேறு பல முக்கிய முடிவுகளும் கூட எடுக்கப்பட்டது. சர்வதேச நாடுகள் மத்தியில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருவதாகவும் அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா இதில் கோரிக்கையும் விடுத்திருந்தது.
இத்தாலி எடுத்த முடிவு: இது தவிர மேலும் பல முக்கிய நிகழ்வுகளும் இதில் நடந்தன. குறிப்பாகச் சீனாவின் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலி கூறியுள்ளது. இது அதில் சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதென்ன தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்.. இத்தாலியின் முடிவு ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த ஜி20 மாநாட்டில் சீனா கலந்து கொள்ளாத நிலையில், சீனப் பிரதமர் லீ கியாங்கிடம் தனிப்பட்ட முறையில் இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறியுள்ளார். இத்திட்டம் காரணமாக அமெரிக்கா- இத்தாலி உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதே இதில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்யக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இத்தாலி பிரதமர்: இது குறித்து விபரம் அறிந்த ஒருவர் கூறுகையில், "ஜி20 மாநாட்டில் தனிப்பட்ட முறையில் இத்தாலி பிரதமர் நேற்று சனிக்கிழமை சீன பிரதமரைச் சந்தித்து இதைத் தெரிவித்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் முக்கிய திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து இத்தாலி விலகத் திட்டமிட்டுள்ளதை இத்தாலி பிரதமர் மெலோனி சீன பிரதமரிடம் தெரிவித்தார். அதேநேரம் சீனா உடன் நட்புறவைத் தொடரவே விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்" என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் இத்தாலி இந்த பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தீவிர ஆலோசனைக்குப் பிறகு இத்தாலி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. சீனாவின் இந்த பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைந்தால் மற்ற உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கப்படும் அபாயம் இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கட்டுப்பாடுகளை விதிக்கலாம்: இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த திட்டத்தில் இருந்து இத்தாலி வெளியே முடிவு செய்துவிட்டதாகப் பல சர்வதேச ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டன. இருப்பினும், சீனா இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாலி உடனான வர்த்தகத்திற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பதால் இத்தாலி பிரதமர் மெலோனி பல மாதங்களாகக் குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இத்தாலிக்கான சீனத் தூதர், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினால், இத்தாலிக்கு பதிலடி தரப்படும் என்ற ரேஞ்சில் பேசியிருந்தார். இதன் காரணமாகவே மெலோனி பல மாதங்கள் அமைதியாக இருந்தார். இப்போது ஒரு வழியாக இதைச் சீனாவுக்குத் தெரிவித்துவிட்டார். மேலும், சீனா இதற்காக தங்கள் நாட்டுடன் எந்தவொரு வர்த்தக தடையையும் அறிவிக்கக் கூடாது என்பதற்காக மெலோனி வரும் மாதங்களில் சீனாவுக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்: அது சரி இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் என்றால் என்ன. இதில் இருந்து இத்தாலி ஏன் வெளியேறியது என்பது குறித்து பார்க்கலாம். சீனாவுடன் உலகெங்கும் இருக்கும் நாடுகளை இணைப்பதே இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative).கடந்த 2013இல் சீன அதிபர் ஜி ஜின்பிங் இத்திட்டத்தை அறிவித்தார். உலகெங்கும் இருக்கும் 150+ நாடுகள் இதில் உள்ளன.
உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த திட்டத்தில் இருக்கிறது. இது எந்தளவுக்கு பெரியது என்று சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவில் எஸ்வதினி என்ற ஒரு நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இதில் உள்ளன.
மிகப் பெரிய திட்டம்: உலகில் ஒரு தனி நாடு அறிவித்ததிலேயே இதுதான் மிக பெரிய திட்டமாகும். இதில் பெல்ட் என்பது உலகெங்கும் சீனா ஏற்படுத்தப் போகும் சாலை மற்றும் ரயில்வே கனெக்ஷனை குறிக்கிறது. அதேநேரம் ரோட் என்பது உலகம் முழுக்க சீனா கடல் வழியாக ஏற்படுத்தப் போகும் கடல் போக்குவரத்தைக் குறிக்கும் திட்டமாகும். சீனாவின் வெளியுறவுக் கொள்கைகள் இதைச் சார்ந்தே இருந்துள்ளது.
அதேநேரம் இது குறித்த விமர்சனங்களும் கடந்த காலங்களிலேயே எழுந்துள்ளன. அதாவது இத்திட்டத்திற்காகச் சீனா உலகின் பல நாடுகளில் கடன் கொடுப்பதாகவும் பிறகு அந்த நாடுகளால் கடனை திரும்பத் தர முடியாத போது, அவர்களை நெருக்குவதாகவும் கூறுகிறார்கள். இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்த பல சம்பவங்களை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இதையும் மனதில் வைத்தே இத்தாலி இத்திட்டத்தில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications