அம்பானி முதல் விவேக் ஓபராய் வரை.. எல்லாரும் சொல்லி வைத்தார் போல துபாயில் முதலீடு செய்ய என்ன காரணம்!
டெல்லி: இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் பலரும் துபாயில் தான் இப்போது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமானது ஐக்கிய அமீரகம்.. அதில் இருக்கும் டாப் நகரங்களில் ஒன்று துபாய். சர்வதேச அளவில் முக்கியமான நகரமாக இருக்கும் துபாயில் தான் இப்போது இந்தியர்கள் அதிகம் முதலீடு செய்கிறார்கள்.

இந்தியர்கள், அதிலும் குறிப்பாகப் பணக்கார இந்தியர்கள் எதற்காகத் துபாயில் முதலீடு செய்கிறார்கள். அதில் இருக்கும் நன்மைகள் என்ன, பிரச்சினைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முதலீடு: இப்போது இந்தியாவின் பணக்காரர்கள் அதிகம் முதலீடு செய்யும் இடமாகத் துபாய் மாறி இருக்கிறது. துபாயில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் ஏராளமான பணக்கார இந்தியர்கள் முதலீடுகளைக் குவித்து வருகிறார்கள். அங்கே 2.5 லட்சம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் மதிப்புடைய வீடுகள் தான் அங்கே அதிகம் விற்பனையாகிறது.
இப்போது துபாய் பணக்கார இந்தியர்களின் ஹாட்ஸ்பாட் ஆக மாறி வருகிறது. ஈஸியான விசா விதிகள், குறைந்த வரிகள் மற்றும் இந்தியா உடனான நெருக்கம் ஆகியவை தான் பணக்கார இந்தியர்கள் துபாயில் விரும்பி முதலீடு செய்யக் காரணமாக இருக்கிறது. இந்தாண்டு பணக்கார இந்தியர்களில் செல்லும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானி மற்றும் விவேக் ஓபராய் போன்ற முக்கிய பிரமுகர்கள் கூட துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் பெருந்தொகையை முதலீடு செய்துள்ளனர்.
பல காரணங்கள்: இந்தியர்கள் துபாயில் முதலீடு செய்யப் பல காரணங்கள் இருக்கிறது. முதலில் அது இந்தியாவுக்கு அருகில் உள்ளது. வெறும் சில மணி நேரம் பயணித்தால் போதும் துபாய்க்குச் சென்றுவிடலாம். அதேபோல அங்கே இருக்கும் குறைந்த வரி விகிதம். துபாயில் பிஸ்னஸ் செய்ய ஏதுவான சூழல் இருக்கிறது. மேலும், அங்கே வரி விகிதங்களும் குறைவாக இருக்கிறது. மேலும், அங்கே கட்டுப்பாடுகளும் பெரிதாக இல்லாத நிலையில், பணக்கார இந்தியர்கள் முதலீடு செய்ய இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.
அடுத்து பிரைவசி.. துபாயில் முதலீடு செய்தால் யார் எவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் யாருக்கும் தெரியாது. மேலும், அங்கு நடக்கும் பிஸ்னஸ் டீலிங்களில் முக்கிய தகவல்களைப் பொதுவெளியில் அறிவிக்கத் தேவையில்லை என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்., அதேபோல இந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் துபாயில் முதலீடு செய்துள்ளனர். இது முதலீட்டில் நல்ல ஸ்திரத்தன்மையை நமக்குக் கொடுக்கிறது.
சிக்கல்கள்: இருப்பினும், இதில் சில சிக்கல்களும் கூட இருக்கவே செய்கிறது.. குறிப்பாக மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாகப் பணத்தை அங்கே எடுத்துச் செல்வதே சிரமம். அதேபோல இந்தியாவில் இருந்து பணத்தை எடுத்துச் செல்ல வரிகளும் கூட அதிகம்.. இதுபோன்ற காரணங்கள் துபாயில் முதலீடு செய்வதைக் கடினமாக்குகிறது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், துபாய் பணக்கார இந்தியர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக உள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவின் பணக்காரர்கள் பலரும் துபாயில் ஆர்வமாக முதலீடு செய்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications