"நிச்சயம் பழிவாங்குவோம்.." திடீரென சீனுக்குள் வந்த அல் கொய்தா.. அத்திக் அகமது கொலையில் பரபர அறிக்கை
டெல்லி: பிரபல தாதா அத்திக் அகமது கொலைக்குப் பழிவாங்குவோம் என்று அல்கொய்தா பயங்கரவாதிகள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்தவர் அத்திக் அகமது. 100க்கும் மேற்பட்ட வழக்குகளில் இவர் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளது. அவர் ஆள்கடத்தல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே இவரையும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதும் என்பவரையும் போலீசார், கடந்த வாரம் மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அத்திக் அகமது படுகொலை செய்யப்பட்டார்.
அத்திக் அகமது: போலீசார் கஸ்டடியில் இருந்த நிலையில், ஊடகத்தினர் முன்னிலையில் பிரபல தாதா அத்திக் அகமதும் அவரது சகோதரரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். செய்தியாளர்கள் போல வந்த மூன்று பேர் இருவரையும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர்.தங்கள் பிரபலமாக வேண்டும் என்றே இந்த கொலையைச் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 3 பேர் ஷாக் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட 3 பேரும் 25 வயதுக்குக் குறைவானவர்கள் என்பது மற்றொரு ஷாக் தகவல்.
இப்போது கொலையாளிகள் நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே அத்திக் அகமது கொலை குறித்து அல் கொய்தா பயங்கரவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அல் கொய்தா பயங்கரவாதக் குழுவின் இந்தியப் பிரிவான இந்தியத் துணைக் கண்ட அல்கொய்தா (AQIS) அத்திக் அகமது கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

அல் கொய்தா: இது குறித்து அவர்கள் 7 பக்கங்களுக்குத் தனியாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஈத் தினத்தன்று வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், அந்த தீவிரவாதக் குழு அத்திக் அகமதை ஒரு தியாகி எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அத்திக் அகமது கொலைக்குப் பதிலடித் தாக்குதல்களை நடத்துவதாகவும் உறுதியளித்ததுள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாங்கள் ஒடுக்கப்படுவோருக்காக இருப்போம் - அது வெள்ளை மாளிகையாக இருந்தாலும் அல்லது டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லமாக இருந்தாலும் அல்லது ராவல்பிண்டியில் உள்ள பாக். பிரதமர் அலுவலகமாக இருந்தாலும் சரி.. டெக்சாஸிலிருந்து திகார் வரை அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் விடுவிப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.
தியாகம்: மேலும், அத்திக் அகமது கொலை உ.பி.யில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் தியாகம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த கொலையை உத்தரப்பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசின் சதி என்றும் பயங்கரவாதிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, ரம்ஜான் மாதத்தின் கடைசி நாளில் வழக்கமான தொழுகைக்குப் பின்னர் பாட்னாவில் திடீரென சிலர் அத்திக் அகமதுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். மேலும், அவர்கள் மத்திய அரசுக்கும், உ.பி., அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
உபி-இல் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அத்திக் அகமது சமாஜ்வாதி கட்சியிலும் இருந்துள்ளார். மேலும், அவர் உபி சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும்கூட தேர்வாகியுள்ளார். அவருக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில், அவர்களில் இருவர் வெவ்வேறு வழக்குகளில் உபி-இல் சிறையில் உள்ளனர். அதேபோல மற்ற இரு மகன்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications