"பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்!" இந்திய ராணுவ தளபதி நேரடி எச்சரிக்கை
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தி கொள்ளவில்லை என்றால், அதன் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும் என்று இந்தியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ராணுவத் தளபதி ஜெனரல் உபந்திர திவேதி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் மோதல் தொடர்ந்து வந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அப்போது தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் மோதல் முடிவுக்கு வந்தது.

எச்சரிக்கை
இதற்கிடையே ராஜஸ்தானின் அனூப்கர் ராணுவ முகாமில் பேசிய ஜெனரல் திவேதி பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியப் படைகள் அடுத்த முறை இதே கட்டுப்பாட்டுடன் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்த மறுத்தால், ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் விரைவில் நடக்கும் என்பதை மறைமுகமாகச் சொல்லும் வகையிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.
வரைபடத்திலேயே இருக்காது
அவர் மேலும் பேசுகையில், "ஆபரேஷன் சிந்துர் 1.0-ல் கடைப்பிடித்த நிதானத்தை அடுத்த முறை கடைப்பிடிக்க மாட்டோம். உலக வரைபடத்தில் பாகிஸ்தான் தனது இருப்பைத் தக்கவைக்க விரும்புகிறதா இல்லையா என்று யோசிக்கும் அளவுக்கு நடவடிக்கையை எடுப்போம். பாகிஸ்தான் தனது இருப்பை தக்கவைக்க விரும்பினால், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.
படைவீரர்கள் எப்போதும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும், "கடவுள் விரும்பினால், உங்களுக்கு விரைவில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
விமானப்படை தளபதி
இன்று காலை தான் விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் பாகிஸ்தானைச் சாடியிருந்தார். ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. பாகிஸ்தான் பயன்படுத்தி வந்த F-16 (அமெரிக்கா தயாரிப்பு) மற்றும் JF-17 (சீனா தயாரிப்பு) ரக போர் விமானங்கள் நான்கு முதல் ஐந்தை இந்தியப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ஏ.பி. சிங் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்தே ஜெனரல் திவேதி இப்போது நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் மோசமான தாக்குதலை நடத்தினர். அதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. மே 7ம் தேதி இந்தியப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தன.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அத்துமீறி வாலாட்ட முயன்ற நிலையில், இந்தியா மிக கடுமையான பதிலடியைக் கொடுத்தது. நான்கு நாள் சண்டையில் பாகிஸ்தானின் மிகப் பெரிய சேதங்களை எதிர்கொண்டன. இதனால் இந்தியத் தளபதிகளிடம் தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியதைத் தொடர்ந்து, மே 10 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஆபரேஷன் சிந்துரில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று அதிகாரிகளையும் ராணுவத் தளபதி கௌரவித்தார். இந்த நிகழ்வில், பி.எஸ்.எஃப் 140வது பட்டாலியன் கமாண்டன்ட் பிரபாகர் சிங், ராஜ்புதானா ரைபிள்ஸ் மேஜர் ரிதேஷ் குமார் மற்றும் ஹவில்தார் மோஹித் கைரா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கவரவிக்கப்பட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications