இந்திய பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் கூட கைவிலங்கு போடப்பட்டிருந்தது! வெளியான ஷாக் தகவல்
டெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கைவிலங்கு (handcuffs) போடப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்த நிலையில், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கைவிலங்கு போடப்பட்டுதான் அழைத்துவரப்பட்டனர் என்று நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் 104 இந்தியர்களுடன் சி-17 அமெரிக்க போர் விமானம் ஒன்று பஞ்சாபில் தரையிறங்கியது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

சட்டவிரோத குடியேறிகளை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது. எனவே, அவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியதில் பிரச்சனை இல்லை. ஆனால், எப்படி அனுப்பினார்கள் என்பதுதான் பெரிய பிரச்சனையாக வெடித்தது. 104 இந்தியர்களை கொண்டுவர பயன்படுத்தப்பட்டது ராணுவ விமானம். இதில் ஒரே ஒரு கழிப்பறை மட்டும்தான் இருக்கும். அமெரிக்காவுக்கும்-பஞ்சாப்புக்கும் ஏறத்தாழ 12,000 கி.மீ தொலைவு இருக்கிறது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வந்தால் கூட 61 மணி நேரம் ஆகும். ஆனால் சி-17 விமானம் 300 கி.மீ வேகத்தில் 40 மணி நேரம் பயணத்து இந்தியா வந்திருக்கிறது.
விமானத்தில் வந்தவர்களில் 4 வயது குழந்தை ஒன்றும், பெண்கள் 19 பேரும், சிறுவர்கள் 13 பேரும் இருந்திருக்கின்றனர். கொடுமை என்னவெனில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் கைவிலங்கு போடப்பட்டிருக்கிறது என்பதுதான்.
நேற்று இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியிருந்தனர். கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால், விமானத்தில் வந்தவர்கள் இதனை மறுத்துள்ளனர்.
அமிர்தசரஸை சேர்ந்த 18 வயது இளைஞர் ராபின் ஹாண்டாவும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 பேரில் ஒருவர். 'தி இந்து' ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், பெண்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் கைவிலங்கு போடப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார். "ஐடிஐயில் படித்து முடித்த பின்னர் என்னை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்று அப்பா விருப்பப்பட்டார். இதற்காக அவர் பெயரில் இருந்த நிலத்தை விற்று ரூ.15 லட்சத்தை தயார் செய்தார்.
அது போதவில்லை. இன்னும் அதிகமாக பணம் தேவைப்பட்டது. மொத்தமாக ரூ.30 லட்சம் வரை தேவைப்பட்டது. எனவே வெளியில் கடன் வாங்கி என்னை பிரிட்டன் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்ப ஏஜென்டை அணுகினார். ஏஜென்ட்டும் என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி செய்தார். ஆனால் நான் பிரிட்டன் போகவில்லை மாறாக பிரேசில்தான் சென்றேன். அங்கிருந்து அமேசான் காடுகளை கடந்து பெருவுக்கும், கொலம்பியாவுக்கும் வந்து சேர்ந்தேன். என்னை மாதிரியே பலரும் அமெரிக்காவில் நுழைய முயன்றது அப்போதுதான் தெரிய வந்தது. அது ஒரு குழு. நாங்கள் கொலம்பியாவை கடந்து மெக்சிகோவுக்கு சென்றோம்.
போகும் வழியெங்கும் பெரிய மலைகளும், ஆறுகளும் இருந்தன. எங்கள் குழுவில் இருந்தவர்களில் யாருக்காவது அடிப்பட்டுவிட்டால், அவர்கள் பாதியிலேயே கைவிடப்படுவார்கள். ஒரு வழியாக மெக்சிகோ வந்து சேர்ந்தோம். ஆனால் அங்கு என்னையும் என்னுடன் வந்தர்களையும் காவல்துறை கைது செய்தது. ஜன.22ம் தேதி நாங்கள் கைது செய்யப்பட்டோம். பின்னர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டோம். விமானத்தில் என்னுடன் பெண்களும், சிறுவர்களும் இருந்தனர். அனைவருக்கும் கைவிலங்கு போடப்பட்டிருந்தது.
விமானத்தில் இருக்கும் எங்களுக்கு, நாங்கள் எங்கு போகிறோம் என்றே தெரியாது. பஞ்சாபில் விமானம் தரையிறங்கியபோதுதான் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தோம் என்பது தெரிய வந்தது" என கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை மேற்கோள்காட்டி, அமைச்சர் நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications