டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகளிர் ஆணைய தலைவிக்கே நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் அத்துமீறிய கார் டிரைவர்! தலைநகரில் ‘ஷாக்’ சம்பவம்

Google Oneindia Tamil News

டெல்லி : டெல்லி மகளிர் ஆணைய தலைவியிடம், கார் டிரைவர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடி போதையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவாலிடம் அத்துமீறிய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது நாடு முழுவதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவருக்கே இது போன்ற கொடூரம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் கவலை தெரிவித்துள்ளார்.

 ஆண்களே கவனம்! இந்த டைப் கார் ஓட்டுனா.. அந்த உறுப்பு சின்னதா இருக்க வாய்ப்பு அதிகம்.. பகீர் ஆய்வு ஆண்களே கவனம்! இந்த டைப் கார் ஓட்டுனா.. அந்த உறுப்பு சின்னதா இருக்க வாய்ப்பு அதிகம்.. பகீர் ஆய்வு

மகளிர் ஆணைய தலைவி

மகளிர் ஆணைய தலைவி

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மலிவால். இவர் நேற்று நள்ளிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு அதிகாலை 3 மணியளவில் ஸ்வாதி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2ஆவது கேட் நுழைவுவாயில் பகுதியில் தனது குழுவினருக்காக நின்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் காரில் வந்த நபர் ஒருவர், ஸ்வாதி மலிவாலை காரில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளார்.

கார் டிரைவர் அத்துமீறல்

கார் டிரைவர் அத்துமீறல்

அதற்கு ஸ்வாதி மறுத்த நிலையில், அந்த நபர் வேகமாக தனது காரை எடுத்துக்கொண்டு முன்னே சென்று பிறகு யூ-டர்ன் போட்டு மீண்டும் ஸ்வாதிக்கு அருகே வந்துள்ளார். அந்த காரின் ஒட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். வேகமாக காரின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஸ்வாதியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். ஸ்வாதி டிரைவரை பிடியை விடுவிக்க முயற்சித்து அவரது கையை இழுத்துள்ளார். உடனே காரின் கண்னாடியை உயர்த்தியுள்ளார் அந்த டிரைவர்.

 இழுத்துச் சென்றார்

இழுத்துச் சென்றார்

கார் கண்ணாடியை டிரைவர் முக்கால்வாசிக்கும் மேல் மூடியதால், அதில் ஸ்வாதியின் கை சிக்கியிருந்த நிலையில், சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு அவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஸ்வாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மகளிர் ஆணைய தலைவருக்கே டெல்லியில் பாதுகாப்பு இல்லை என்றால் இங்குள்ள சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள் என ஸ்வாதி மலிவால் கவலையோடு தெரிவித்துள்ளார்.

டிரைவர் கைது

டிரைவர் கைது

ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் கிடைத்த சிசிடிவி ஆதாரங்களை வைத்து கார் டிரைவரை கண்டுபிடித்துள்ளனர். அந்த நபரின் பெயர் ஹரிஷ் சந்திரா என்றும் அவருக்கு வயது 47 என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கொடூரங்கள்

டெல்லி கொடூரங்கள்

சமீபத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது டெல்லியில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டியில் வந்தபோது ஒரு கார் மோதியதில், அவரது ஆடை காரின் சக்கரத்தில் சிக்கி சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வாகனத்தின் அடியில் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மகளிர் ஆணையத் தலைவிக்கே டெல்லியில் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Delhi Commission for Women chief Swati Maliwal was Molested and dragged by a drunken ar driver for nearly 10-15 metres opposite AIIMS last night. Misbehaved driver Harish Chandra arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X