லோக்சபாவில் நிறைவேறியது மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா.. புதிய நாடாளுமன்றத்தின் முதல் மசோதா இது!
டெல்லி: மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு 'நாரி சக்தி வந்தன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
இந்நிலையில் மசோதா குறித்து அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பங்கேற்ற விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. இந்த மசோதாவை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்திப் பேசினர். பாஜக அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும் விமர்சித்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பாஜக மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் பதில் அளித்துப் பேசினர். இதையடுத்து, வாக்கெடுப்பின் மூலம் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் இந்த மசோதா லோக்சபாவில் ஏகமனதாக நிறைவேறியது.
மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. 3ல் 2 பங்கு ஓட்டுக்கு மேல் மசோதாவுக்கு ஆதரவாகப் பதிவானதையடுத்து, மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திய பாராளுமன்ற கட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் பிறகு பிறகு அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க இந்த மசோதா வழிவகை செய்யும்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!











Click it and Unblock the Notifications