புத்தாண்டான 2025ல் இந்தியாவில் கோடை வெயில் பயங்கரமாக கொளுத்தும்! வானிலை மையம் ஷாக் தகவல்
டெல்லி: 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் வெயில் அதிகமாக காணப்படும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குளிர் காலத்தில் ஓரளவுக்கே குளிர் காணப்படும் என்றும் அறிவித்துள்ளது. தற்போது பெய்த மழையால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது என்றாலும் கோடை வெயிலை எப்படி சமாளிக்கிறது என்பதை நினைத்தாலே பகீரென்கிறதே!
அதாவது 2023, 2024 ஆம் ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. அதை மிஞ்சும் அளவுக்கு 2025 ஆம் ஆண்டு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போது அந்த ஆண்டில் கோடை காலம் எப்படியிருக்கும் என்பதை உலக வானிலை மையம் எப்போதும் கணித்து அறிவிக்கும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கமாகும். இதன் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
இந்த அமைப்பில் ஈக்வடோரியல் கினியா, கிரெனடா, லிச்சென்ஸ்டீன், மார்ஷல் தீவுகள், பலாவ், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் வி்ன்சென்ட், சான் மரினோ, குக் தீவுகள் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக இல்லை. இந்த நிலையில் இந்த அமைப்பானது 2025 ஆம் ஆண்டுக்கான வெப்பநிலையை கணித்துள்ளது.
அதன்படி நடப்பாண்டில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை இருக்கும். பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு இதே நிலைமை தொடரலாம். இதனால் வெப்பநிலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குளிர் காலத்தில் ஓரளவு குளிர் காணப்பட்டாலும் கோடை காலத்தில் பொதுமக்கள் மிக கடுமையான வெப்பத்தை தாங்க வேண்டிய சூழல் ஏற்படும். 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் எப்படி மிகக் கடுமையான வெப்பம் காணப்படுமோ, அதே போல் இந்த ஆண்டும் வெப்பநிலை நிலவும் என அஞ்சப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின. மேலும் வடகிழக்கு பருவமழையும் இயல்பை காட்டிலும் அதிகரித்திருந்தன. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏதும் ஏற்படாது என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெயில் அதிகரித்து காணப்படும் என்பதுதான் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை காலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை விட வெப்பம் அதிகமாகவே இருக்கும். திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் 110 டிகிரியை காட்டிலும் வெப்பநிலை அதிகமாகவே காணப்படும். இப்படிப்பட்ட நிலையில் தற்போது கோடை வெயில் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுவதால் ஒரு வீட்டிற்கு எத்தனை ஏசியை வாங்கி போடுவதோ என மக்கள் அங்கலாய்த்து கொள்கிறார்கள்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
Badam Pisin Jelly: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான 'பாதாம் பிசின் பழக் கலவை ஜெல்லி! தயாரிப்பது எப்படி? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications