வீடியோ ஆதாரம் கேட்ட டெல்லி போலீஸ்! வாக்குமூலத்தை மாற்றிய மைனர் வீராங்கனை? பாலியல் புகாரில் பரபர
டெல்லி: பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரில் ஆதாரங்களை டெல்லி போலீசார் கேட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மல்யுத்த வீரர்கள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது கடந்த ஜன. மாதம் பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அவர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர்.

பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யவே சுப்ரீம் கோர்ட் வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சென்றனர். பாஜக எம்பியாகவும் இருக்கும் பிரிஜ் பூஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
போலீசார்: இதற்கிடையே அவர்கள் உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர்கள் சந்தித்த நிலையில், போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தனர். வரும் 15ஆம் தேதிக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வீரர், வீராங்கனைகள்.. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் எதிராக பாலியல் புகாரில் போட்டோ, வீடியோக்கள் அல்லது வாட்ஸ்அப் சாட்களை ஆதாரமாக சமர்ப்பிக்குமாறு பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் டெல்லி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், வேறு பல ஆதாரங்களைச் சேகரிக்கும் முயற்சியிலும் டெல்லி போலீசார் இப்போது இறங்கியுள்ளனர்.
பஜ்ரங் புனியா: டெல்லி போலீசார் இப்போது CrPC 91 நோட்டீஸை வழங்கியது. இது வழக்கு தொடர்பான எந்த ஆவணத்தையும் கோர விசாரணை அதிகாரிக்கு அதிகாரத்தை வழங்குகிறது. அதன்படி ஆதாரங்கள் எதாவது இருந்தால் அதை ஒப்படைக்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் வீரர் பஜ்ரங் புனியா, நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார். அதில் வீரர்கள் காவல்துறை விசாரணையை நம்பவில்லை என்றார். மேலும், அவரை பாதுகாக்க முயற்சி நடப்பதாகவும், பூஷன் விசாரணைக்கு இடையூறாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து பஜ்ரங் புனியா மேலும் கூறுகையில், "பிரிஜ் பூஷன் அங்கே இருக்கும் போதே.. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அலுவலகத்திற்கு மல்யுத்த வீராங்கனையை போலீசார் நேற்று அழைத்துச் சென்றனர். கிளம்பும் போதே பிரிஜ் பூஷன் அங்கே இருக்கிறாரா எனப் பெண் வீரர் கேட்டார். அங்கே அவர் இல்லை எனப் பொய் கூறி போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சென்று பிரிஜ் பூஷன் இருப்பதைக் கேள்விப்பட்டு அந்த பெண் பயந்துவிட்டார்" என்றார்.
சாக்ஷி மாலிக்: ஒலிம்பியன் சாக்ஷி மாலிக் கூறுகையில், "மொத்தம் 7 வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு பெண் மைனர். கடும் அழுத்தம் காரணமாக மைனர் வீரர் தனது வாக்குமூலத்தை மாற்றியுள்ளார். இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப் பெரிய அழுத்தம் கொடுக்கிறார்கள். புகார் அளித்தவர்களை பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்கள்" என்றார்.
இந்த பாலியல் தொல்லை சம்பவம் தான் 18 வயதுக்குக் குறைவாக இருந்த போது நடந்தது இல்லை என அந்த வீராங்கனை கூறியதாகத் தெரிகிறது. வயது குறித்த தகவல்களை மட்டுமே வீராங்கனை மாற்றியுள்ளதாக அவரது தந்தை கூறினார். அதேநேரம் பாலியல் துன்புறுத்தல் குறித்த அவரது புகார் அப்படியே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சாக்ஷி மாலிக் மேலும் கூறுகையில், "விசாரணையை மாற்றி, சாட்சிகளை அச்சுறுத்தவும் அளவுக்கு பூஷனுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இருக்கிறது. இதனால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. அவரை கைது செய்யவில்லை என்றால் விசாரணை நேர்மையாக நடக்காது" என்றார்.
பிரிஜ் பூஷன் தொடக்கம் முதலே தன் மீதான பாலியல் புகார்களைத் தொடர்ந்து மறுத்தே வருகிறார். உள்நோக்கத்துடன் இந்த புகார்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அவர், தன் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications