WWE புகழ் மல்யுத்த வீரர் ‛கிரேட்’ காளி பாஜகவில் இணைந்தார்.. பஞ்சாப் பிரச்சாரத்தில் குதிக்கிறார்!
டெல்லி: பிரபல மல்யுத்த வீரர் ‛கிரேட்' காளி பாஜகவில் இணைந்தார். பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், ஆட்சி கட்டிலில் அமர பாஜக, ஆம்ஆத்மி கட்சிகள் வியூகங்கள் வகுத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

பாஜகவில் ‛கிரேட்’ காளி
இந்நிலையில் WWE மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவரும், பஞ்சாப்பை சேர்ந்தவருமான ‛கிரேட்' காளி டெல்லியில் வைத்து பாஜவில் இணைந்தார். விரைவில் அவர் பஞ்சாப்பில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

சிறந்த பிரதமர் மோடி
இதுகுறித்து அவர் கூறுகையில்,‛‛பாஜகவில் இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை பார்க்கும்போது அவர் தான் நாட்டுக்கான சிறந்த பிரதமர் என உணர்ந்தேன். மேலும் பாஜகவில் இணைந்து நாட்டின் மேம்பாட்டில் பங்கெடுக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது கட்சியில் இணைந்துள்ளேன்'' என்றார்.

யார் இந்த ‛கிரேட்’ காளி
இவர் பஞ்சாப்பில் போலீஸ் துறையில் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் தனது அதீத உடல் வளர்ச்சியால் 2000ம் ஆண்டில் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றார். WWE சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இவருக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதுதவிர 4 ஹாலிவுட், 2 பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்
முன்னதாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி 2020ல் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். பொதுமக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications