2 மணி நேரம் நீடித்த மீட்டிங்! யோகி ஆதித்யநாத் - பிரதமர் மோடி சந்திப்பில் நடந்தது என்ன? பரபர தகவல்
டெல்லி: உபி தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆகும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மாலை சந்தித்தார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது. உபி, உத்தரகண்ட், மணிப்பூர். கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அக்கட்சியினர் அளித்த பிரம்மாண்ட வரவேற்பு இதற்கு ஒரு சாட்சியாகும்.

உத்தரப் பிரதேசம்
குறிப்பாக இந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி கடும் போட்டி தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 255 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. சமாஜ்வாதி கட்சியால் 111 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. உபி-இல் கடந்த 40 ஆண்டுகளில் ஆளும் கட்சி ஒன்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

பிரதமர் மோடி உடன் சந்திப்பு
தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் உத்தரப் பிரதேச அரசின் புதிய அமைச்சரவை குறித்து இருவரும் ஆலோசித்தாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் நீட்டித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பதவியேற்பு விழா தேதி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் ட்வீட்
யோகி ஆதித்யநாத் உடனான சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " யோகி ஆதித்யநாத்தை இன்று சந்தித்தேன். உ.பி. தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு வாழ்த்தினேன். கடந்த 5 ஆண்டுகளில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர் அயராது உழைத்துள்ளார். வரும் ஆண்டுகளில், அவர் நிச்சயம் மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை
இந்த உபி தேர்தலில் பாஜகவுக்கு சில கசப்பான முடிவுகளும் காத்திருந்தது. உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தோல்வியடைந்தார். சிரத்து தொகுதியில் போட்டியிட்ட கேசவ் பிரசாத் மவுரியா, சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி கூட்டணிக் கட்சியான அப்னா தளம் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வர் பதவியில் நீட்டிப்பரா இல்லை துணை முதல்வர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படுவாரா என்பதை பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலவை மூலம் சட்டசபையில் நுழையும் வாய்ப்பு கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு உள்ளது. அவரைத் தவிர மேலும் 10 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications