திடீரென சட்டையை கழற்றிய காங்கிரஸ் நிர்வாகிகள்.. டெல்லி AI மாநாட்டில் களேபரம்.. வெடித்த போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஏஐ மாநாட்டில் இன்றைய தினம் திடீரெனக் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஏஐ மாநாட்டிற்கு வந்த காங்கிரஸ் இளைஞரணி பிரிவினர் சட்டையை கழற்றிவிட்டு ஊர்வலம் சென்றனர். இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் மத்திய அரசு ஏஐ உச்சி மாநாடு நடத்துகிறது. இதில் உலகெங்கும் உள்ள முக்கிய ஏஐ நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். ஏஐ சார்ந்து பல புதிய கண்டுபிடிப்புகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டன. இதன் தொடக்க நாட்களில் முறையான வசதிகள் இல்லை என்று சர்ச்சைகள் எழுந்தாலும், அதன் பிறகு எந்தவொரு குழப்பமும் இல்லாமலேயே இந்த நிகழ்வு நடந்து வருகிறது.

Congress protest in AI summit

இந்த AI இம்பாக்ட் மாநாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்துப் பேசப்பட்டது. இதற்கிடையே இந்த மாநாட்டில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். காங்கிரஸின் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் சட்டைகளைக் கழற்றி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்திய அமெரிக்க ஒப்பந்தத்திற்கு எதிரான முழக்கங்களோடு சட்டையின்றி அவர்கள், ஏஐ மாநாட்டில் ஊர்வலம் போல நடந்து சென்றனர். இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கே பல நன்மைகள் இருப்பதாகவும் இந்தியாவுக்குத் தேவையான டீல்களை பெற மத்திய அரசு தவறிவிட்டதாகக் காங்கிரஸ் விமர்சித்து வந்த நிலையில், இந்த போராட்டம் நடந்துள்ளது. போராட்டம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது தொடர்பாக இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் கிருஷ்ணா ஹரி, பீகார் மாநிலச் செயலாளர் குந்தன் யாதவ், உ.பி. துணைத் தலைவர் அஜய் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்மா யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு நடக்கும் இடத்திற்கு உள்ளே செல்ல QR குறியீட்டு அனுமதி தேவை.. எப்படியோ அந்த அனுமதியை பெற்ற போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்து இதுபோல செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்த போலீசார், போஸ் சாப்ட்வேர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை அடையாளம் கண்டு வருகிறார்கள். விரைவில் போராட்டத்தில் இறங்கிய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+