Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தப்பு தாளங்கள்".. ரூட் மாறிய பெண்ணை.. தாங்கிய "ராமராஜன்".. கறிக்கடைக்கு போன்.. கடைசியில் பார்த்தால்?

பீர் பாட்டில் பாய்சன் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: கள்ளக்காதலிலேயே ஒரு கள்ளத்தனம் நடந்திருக்கிறது.. ஒரு உயிரும் பரிதாபமாக பிரிந்துள்ளது.. தர்மபுரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த கள்ளக்காதல் கேஸ் மட்டும், ஒரு எல்லையே இல்லாமல் ஊரு விட்டு ஊர், மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம்.. என கடந்து போய் கொண்டேயிருக்கிறது..

அதேபோல, பெண்களை பாதுகாக்க எத்தனையோ சட்டங்கள் இருந்தும், பெண்களுக்கு ஏராளமான பாதிப்புகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டேயிருக்கின்றன..

பாய்சன்

பாய்சன்

பாதிக்கப்பட்ட பெண்களுக்கே தெரியாமலே ஏகப்பட்ட அக்கிரமங்கள் நடந்து வருகிறது என்றால், சில இடங்களில் அந்த பெண்களுக்கு தெரிந்தும், உடந்தையாக இருந்து அநியாயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதில் பிரதான இடத்தில் இருப்பது கள்ளக்காதலால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள்தான்.. பெற்றெடுத்த, தன்னுடைய பச்சிளம் குழந்தையையே கொடூரமாக கொல்வதும், தாலி கட்டிய கணவருக்கே சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்வதும் என, பெண்களே இத்தகைய கொடூரங்களில் இறங்கி வருகின்றனர்..

டேஞ்சர்

டேஞ்சர்

சில இடங்களில், மனைவியின் கள்ளக்காதலை ஜீரணிக்க முடியாமல், உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு சென்ற கணவன்கள் அவர்களை கொல்வதும் அதிகரித்து விட்டது.. துரோகத்தின் அடிப்படையில் இந்த கள்ளக்காதல்கள் பெருகினாலும், அந்த கள்ளக்காதலிலும்கூட நியாயம் இல்லாமல் நடந்து கொள்ளும் அட்டூழியங்கள் பெருகிவிட்டன.. இதோ அரூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது பாருங்கள். அரூர் அடுத்த குடுமியாம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்.. இவர் மனைவி பெயர் வைத்தீஸ்வரி... இவர்களுக்கு கல்யாணமாகி 13 வருடங்களாகிறது..

 சீரியஸ் கண்டிஷன்

சீரியஸ் கண்டிஷன்

2 பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்... கடந்த தீபாவளியன்று, வைத்தீஸ்வரி திடீரென விஷத்தை குடித்துவிட்டார்.. இதனால் பதறிப்போன குடும்பத்தினர், வைத்தீஸ்வரியை அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.. உடல்நிலை சீரியஸாக இருந்ததால், பிறகு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.. அப்போதும் அபாய கட்டத்தில் இருந்து வைத்தீஸ்வரி மீளவில்லை.

 தறிகெட்ட மனசு

தறிகெட்ட மனசு

அதனால், கிருஷ்ணகிரியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. டாக்டர்கள் எவ்வளவோ பாடுபட்டும், சிகிச்சை பலனின்றி வைத்தீஸ்வரி இறந்துவிட்டார்.. இதையடுத்து, இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையையும் மேற்கொண்டனர்... அப்போதுதான், வைத்தீஸ்வரியின் காதல் விவகாரமே வெளியே தெரியவந்தது.. குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் வைத்தீஸ்வரிக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது.. அவர் பெயர் ராமராஜன்..

 விஷபாட்டில்

விஷபாட்டில்

குடும்பத்தையும், குழந்தைகளையும் மறந்து ராமராஜனுடனான உறவில் மூழ்கிக்கிடந்தார் வைத்தீஸ்வரி.. ஒருகட்டத்தில், இந்த கள்ள ஜோடிக்குள்ளேயே தகராறு வெடித்துவிட்டது.. கருத்து வேறுபாடுகளால், நிறைய சண்டைகளை போட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள்.. மற்றொருபக்கம், இவர்களின் விவகாரம், வைத்தீஸ்வரி குடும்பத்துக்கு தெரிந்துவிட்டதால், பிரச்சனையாக வெடித்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதையடுத்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று இந்த கள்ளக்காதலர்கள் முடிவெடுத்துள்ளனர்.. அதன்படி, சம்பவத்தன்று பீர் வாங்கிக்கொண்டு வந்தாராம் ராமராஜன்..

 பாய்சன் பீர்

பாய்சன் பீர்

அந்த பீர் பாட்டிலில் விஷம் கலந்து, அதை குடித்துவிட்டு இருவருமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் முடிவெடுத்துள்ளனர்.. பீர் பாட்டிலில் விஷத்தை கலந்து, இருவருமே குடித்துவிட்டனர்.. ஆனால் வைத்தீஸ்வரி மட்டும் மயங்கி விழுந்துள்ளார்.. காரணம், ராமராஜன் அந்த விஷத்தை குடிக்கவில்லையாம்.. குடிப்பது போல வைத்தீஸ்வரி முன்பு டிராமா போட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதனிடையே, வைத்தீஸ்வரியின் மரணத்துக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரூர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேஷதாரி

வேஷதாரி

இந்த ராமராஜனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாம்.. மனைவி, 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இப்படித்தான், ஏற்கனவே 3 பெண்களிடம் கள்ளத்தனமாக ராமராஜன் உறவு வைத்திருந்தாராம்.. அந்த 3 குடும்பங்களுமே சீரழிந்துவிட்டதாம்.. இதைதவிர, பல திருட்டு சம்பவங்களிலும் ராமராஜன் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. நிறைய பேரிடம் கடன்வாங்கி, ஏமாற்றி வந்துள்ளார்.. பெண்கள் விஷயத்துக்காகவே நிறைய செலவு செய்வாராம்.. இதற்காகவே யாரிடம் வேண்டுமானாலும் கடன் வாங்க துணிவாராம்.. இப்படிப்பட்டவரை நம்பிதான் வைத்தீஸ்வரி, விஷத்தை குடித்துள்ளார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+