தர்மபுரி அருகே பிரபல கோயிலின் உண்டியலை திறந்தால்.. 90 கோடி ரூபாய்... ஆடிப்போன அதிகாரிகள்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றின் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை போடப்பட்டிருக்கிறது. இதை கண்டு திடுக்கிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இது உண்மையா என்று நம்ப முடியாமல் இருக்கிறார்கள்.. குறிப்பிட்ட வங்கியில், விசாரித்து வருகிறார்கள்.
கோயில்களுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் பணம், நாணயங்கள், தங்க காசு, தங்க நகைகள், வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களில் உண்டியல் வசூல் கோடிகளை தாண்டும்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பிலியனூர் பி.அக்ரஹாரத்தில் மிகவும் பிரபலமான முனியப்பன் கோயில் இருக்கிறது இங்கு அமாவாசை நாட்களில் ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம் 2வது செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
இந்த திருவிழாவிற்கு பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது தங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிக்கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.. நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிடும் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
இந்த கோயில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் ஆகும். முனியப்பன் கோயிலின் முன் பகுதியில் பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதானம் உண்டியல் இருக்கிறது.இந்த உண்டியலை அறநிலையத்துறை வைத்திருக்கிறது. இந்த உண்டியலை அறநிலையத்துறை அதிகாரிகள் மாதத்துக்கு ஒரு முறை உண்டியலை திறந்து, அதில் இருக்கும் பணத்தை எடுப்பது வழக்கம்
அந்த வகையில் இந்து அறநிலையத்துறை வைத்த உண்டியல் நேற்று தருமபுரி அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் இருந்த பணத்தை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, அந்த உண்டியலில் ஒரு காசோலை இருந்ததை எடுத்தார்கள் அந்த காசோலையில் சாமிக்கு 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, காசோலையைக் கைப்பற்றிய அதிகாரிகள் அதில் மகேந்திரன் என்பவர் பெயரில், சவுத் இந்தியன் வங்கிக்கான கணக்கில் காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும், அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்து இன்று சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிக்கிறார்காளம்
விசாரணைக்கு பின்னரே இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா என்பது தெரியவரும் என்று கூறுகிறார்கள். தற்போது பென்னாகரம் கோயில் உண்டியலில் 90 கோடிக்கான காசோலை போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications