2வது முறை "உறவு"க்கு மறுப்பு.. காப்பு காட்டில் ஒரே அக்கிரமம்.. அதுக்குன்னு இப்படியா.. போலீஸ் "சபாஷ்"
கள்ளக்காதலியை இரும்பு ராடால் வெட்டி கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி: தவறான நடத்தை காரணமாக, உயிரையே விட்டுள்ளார் ஒரு இளம்பெண்.. இதன்காரணமாக, அவரது 2 குழந்தைகளும் இன்று தாய், தந்தை இல்லாமல் அனாதையாகி கதறும் சூழலுக்கு ஆளாகி உள்ளன.. என்ன நடந்தது?
உத்தரபிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. அம்ரொஹா மாவட்டத்தில் வசித்து வருபவர் முகமது அன்வர்.. 34 வயதாகிறது.. மனைவி பெயர் ருக்ஷர்.. 30 வயதாகிறது..
கடந்த 2013-ல் இவர்களுக்கு திருமணமாகி உள்ளது.. 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இந்நிலையில், சம்பவத்தன்று அன்வர் தன்னுடைய மனைவியுடன் இரவு உல்லாசமாக இருந்துள்ளார்... பிறகு தூங்கிவிட்டார்..

நடுராத்திரி
சிறிது நேரம் கழித்து மீண்டும் உடலுறவுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், மனைவி ருக்ஷர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதனால், உச்சக்கட்ட கோபம் அடைந்த அன்வர், தூங்கி கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொன்றுவிட்டார்.. பிறகு, நடுராத்திரி உட்கார்ந்து சடலத்தை என்ன செய்வது என்று யோசித்தார்.. ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரை எடுத்து வந்து, அதற்குள் சடலத்தை திணித்து, கயிறு கட்டி பேக்கிங் செய்தார்..

பேக்கிங்
அந்த பேக்கிங்கை எடுத்துக் கொண்டு வந்து, ரோட்டோரத்தில் வைத்துவிட்டு, நேராக போலீஸ் ஸ்டேஷன் போனார்.. மனைவியை காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு ஒப்பாரி வைத்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோதுதான், ரதுபுரா என்ற கிராமத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியபோதுதான், உயிரிழந்தது ருக்ஷர் என்பது தெரியவந்தது..

உல்லாசம்
உடனே அன்வரை பிடித்து தங்கள் பாணி விசாரணையை நடத்தியபோதுதான், ஒரே இரவில் 2 முறை உல்லாசத்துக்கு அழைத்ததாகவும், அவர் வர மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாகவும் வாக்குமூலம் தந்தார். வடமாநிலத்தில்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று பார்த்தால், நம்ம ஊரிலும் இதே கதைதான்.. தர்மபுரி மாவட்டத்தில் நடந்துள்ளது.. கீழானூர் காட்டுப்பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது.

ஆண்டியப்பா
போலீசாரும் விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான் இறந்துபோன பெண், சித்தேரி அடுத்த வெள்ளம் பள்ளியை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் பார்வதி என்பதும் தெரிய வந்தது.. இவரது கணவர் பெயர் ஆண்டியப்பன்.. இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது.. ஆனால், கடந்த 9 வருடங்களுக்கு முன்பே ஆண்டியப்பன் இறந்துவிட்டார்.. அதனால், குழந்தைகளோடு கீரைபட்டியில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார் பார்வதி.. கடந்த ஒருவருடமாக சக்திவேல் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

ஆண்டியப்பா
போலீசாரும் விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான் இறந்துபோன பெண், சித்தேரி அடுத்த வெள்ளம் பள்ளியை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் பார்வதி என்பதும் தெரிய வந்தது.. இவரது கணவர் பெயர் ஆண்டியப்பன்.. இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது.. ஆனால், கடந்த 9 வருடங்களுக்கு முன்பே ஆண்டியப்பன் இறந்துவிட்டார்.. அதனால், குழந்தைகளோடு கீரைபட்டியில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார் பார்வதி.. கடந்த ஒருவருடமாக சக்திவேல் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

காப்பு காடு
இந்த சக்திவேலுக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. பிறகு, இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.. அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லை.. அதனால் 3வதாக பார்வதியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இருவரும் அடிக்கடி கீழானூர் காப்பு காட்டு பகுதிக்கு சென்று தனிமையில் இருந்து வந்திருக்கிறார்கள்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் சென்றுள்ளனர்.. இரண்டாவது முறை உல்லாசத்திற்கு அழைத்திருக்கிறார் சக்திவேல்..

இரும்பு ராடு
அதற்கு மறுப்பு சொல்லி உள்ளார் பார்வதி.. அப்படியானால், வேறு ஒரு நபருடன் உறவில் இருக்கிறாயா? என்று பார்வதி மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார் சக்திவேல், .. இதுவே வாக்குவாதமாக வெடித்துள்ளது.. உடனே மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து, பார்வதி முகத்தை அடித்து சிதைத்து கொன்றுள்ளார்.. அவரது கழுத்தில் கிடந்த சங்கிலி, வெள்ளி கொலுசு போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு, இரண்டாவது மனைவி வீட்டில் போய் ஒளிந்து கொண்டார்.. இறுதியில் 2வது மனைவி வீட்டுக்குள்ளேயே புகுந்த போலீஸ், சக்திவேலை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது..!!!
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications