வர தகவல் சரியா இல்லை.. ஸ்டாலின் காதுக்கே போன தகவல்.. தருமபுரியில் வெளுத்து வாங்கிய "தலை"

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரியில் கள நிலவரம் திமுக வேட்பாளர் ஆ மணிக்கு ஆதரவாக இருந்தாலும், சில இடங்களில் களப்பணிகள் தொய்வு அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்றுள்ளதாம்.

தருமபுரியில் சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு ஆ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து செந்தில் 574,988 வாக்குகள் பெற்று வென்றார். அன்புமணி 5,04,235 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

DMK lagging a little bit in Dharmapuri CM Stalin doses the local cadres and workers

இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலமும், எம்பி நிதி மூலமும் பலரின் மருத்துவ செலவிற்கும், பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்கும் செந்தில் உதவி செய்து வந்தார். ஆனாலும் தொகுதியில் இவரின் பெயர் , கட்சி நிர்வாகிகள் இடையிலான இவரின் உறவு சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது தருமபுரி சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு ஆ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சாதகமான சூழ்நிலை: வழக்கறிஞரான ஆ மணிக்கு அங்கே சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. இங்கே பாஜக கூட்டணியில் தருமபுரி லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார் சவுமியா அன்புமணி. சவுமியாவின் மாமனார் பாமக நிறுவனர், கணவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் லோக்சபா எம்பி, மாநிலங்களவை எம்பி, பாமக தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்து வருகிறார்.

இவர்களுக்கு இடையில் அங்கே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்போது வரை கள நிலவரப்படி பார்த்தால் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையே அங்கே உள்ளது. தருமபுரியில் கள நிலவரம் திமுக வேட்பாளர் ஆ மணிக்கு ஆதரவாக இருந்தாலும், சில இடங்களில் களப்பணிகள் தொய்வு அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்றுள்ளதாம்.

ஸ்டாலினுக்கு சென்ற புகார்: தேர்தல் நெருங்க நெருங்க திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு வருகிற புகார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறதாம். அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதில் ஒவ்வொரு இரவும் அவருக்கு நீண்ட இரவாக இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடி வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ஒவ்வொரு மணி நேரமும் கள நிலவரம் குறித்த அப்டேட்களை தீவிரமாக ஸ்டாலின் நிர்வாகிகளிடம் கேட்டு பெற்று வருகிறாராம். அப்போது, வேட்பாளர்கள் பிரச்சாரம் குறித்தும் தேர்தல் களநிலவரம் குறித்தும் மா.செ.க்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார் ஸ்டாலின்.

தருமபுரி களநிலவரம் சரியில்லை: அந்த வகையில் தருமபுரியில் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில சட்டசபை தொகுதிகளில் பணிகள் சரியாக நடக்கவில்லை. இங்கே அன்புமணி தரப்பு அதிக ஆட்களை களமிறக்கி பணிகளை செய்கின்றனர். மனைவி களமிறங்குவதால் அங்கே மொத்தமாக வட மாவட்டங்களில் உள்ள பாமக நிர்வாகிகளை களமிறக்கி அன்புமணி வேலை செய்கிறார்.

இது பற்றி தருமபுரி நிர்வாகிகளிடம் பேசிய ஸ்டாலின், எனக்கு அங்கிருந்து வர கூடிய தகவல்கள் சரியாக இல்லை. தருமபுரியில் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில சட்டசபை தொகுதிகளில் பணிகள் சரியாக நடப்பதாக எனக்கு தகவல் வரவில்லை.

பிரச்சனை இருக்கும் இடங்களில் உடனே சரி செய்யுங்கள். எனக்கு வர கூடிய விபரங்கள் சரியாக இல்லை என்று தருமபுரி மாவட்ட நிர்வாகிகளை போன் செய்து டோஸ் விட்டுள்ளாராம். இதனால் தருமபுரி நிர்வாகிகளை மீண்டும் களப்பணிகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+