"சூப்பர் புயலாக மாறும் ஆம்பன்".. தமிழகத்திற்கு காத்திருக்கும் செம மழை.. எங்கெல்லாம் பெய்யும்?

ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று கொங்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறுகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று கொங்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    Cyclone amphan: ஆம்பன் புயல் எங்கு கரையை கடக்கும்? தமிழகத்தின் நிலை என்ன?

    இரண்டு நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 1000 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது.

    தற்போது இந்த புயல் அதிஉச்ச தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும். தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 650 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது.

    தமிழகம் மழை

    தமிழகம் மழை

    இந்த நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும். வரும் 20ம் தேதி வரை அங்கு லேசான மழை பெய்யும். அங்கு லேசான காற்றும் வீச கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

    தர்மபுரி நிலை என்ன

    தர்மபுரி நிலை என்ன

    நேற்றுதான் தர்மபுரியில் பெரிய அளவில் சூறைக்காற்று வீசியது. நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு சூறைகாற்று வீசியது. ஆம்பன் புயல் தமிழகத்தை தாண்டி சென்ற போது, இப்படி வேகமாக காற்று வீசியது. இந்த காற்று காரணமாக அங்கு பெரிய அளவில் மரங்கள் விழுந்தது. அதேபோல் கோவையிலும் நேற்று மாலை பல இடங்களில் தீவிரமாக காற்று வீசியது.

    டெல்டா மாவட்டங்கள்

    டெல்டா மாவட்டங்கள்

    அதேபோல் இந்த ஆம்பன் புயல் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிறார்கள். டெல்டாவில் இருக்கும் தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்றே திருச்சியிலும், தஞ்சாவூரிலும் கனமழை பெய்தது. இன்று மாலைக்கு மேல் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஆனால் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதிக வேகத்தில் காற்று வீச கூடும். இந்த புயல் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் சென்னை அருகே இதனால் காற்று வீச வாய்ப்புள்ளது. சமயங்களில் மாலைக்கு மேல் லேசான தூறல் பெய்ய வாய்ப்புள்ளது.

    கடல் எப்படி இருக்கும்

    கடல் எப்படி இருக்கும்

    இந்த புயல் காரணமாக தெற்கு வங்க கடல் பகுதியில் காற்று அவ்வப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிவருகிறது. இதன் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மத்திய வங்க கடல் பகுதியில் அவ்வப்போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. மீனவர்கள் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல கூடாது. அதேபோல் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம், அங்கு தற்போது நிலைமை சரியில்லை என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. குமரி மாவட்ட மீனவர்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+