மாற்றுத்திறனாளிகள் இனி அரசின் உதவி பெற தனித்துவ அடையாள அட்டை கட்டாயம்.. எப்படி பெறுவது தெரியுமா?
தர்மபுரி: இ-சேவை மையங்கள் மூலம் தனித்துவமான அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
"மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஐடி" திட்டம், மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளார்கள், யார் யார் உள்ளார்கள் என்பதை தேசிய அளவில் சேகரிக்க செயல்படுத்தப்படுகிறது. அதன்படியே மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவேற்றம் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அடையா அட்டை பெறுவோருக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகை, பேருந்து, ரயில் பயண சலுகை மற்றும் அரசின் பல்வேறு உதவிகளுக்கு இந்த தனித்துவ அடையாள அட்டை முக்கியமாகும்.
இதனிடையே தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவேற்றம் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு இந்த அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்று திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி நபரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதேபோல் www.swavlambancard.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications