நிலம் வாங்க கொடைக்கானலுக்கு போன தர்மபுரி ஜோடி.. கையில் ரூ.40 கோடி.. நாளெல்லாம் காரிலேயே வந்த சடலம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக, போலீசார் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளார்கள்.. கொலை செய்யப்பட்டவர்கள் கள்ளக்காதல் ஜோடியா? தம்பதியா என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தடங்கம் அருகே உள்ளது வெத்தலகாரன்பள்ளம் செங்காளம்மன் கோயில்.. இந்த கோயில் பக்கத்திலேயே, சிப்காட் தொழிற்பேட்டை புதிதாக அமைய உள்ளது..

இங்குள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கிட்டத்தட்ட 600 மீட்டர் தொலைவில், 2 நபர்களின் சடலங்கள் கிடப்பதாக 2 நாட்களுக்கு முன்பு அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது..

dharmapuri kodaikanal

போலீசார் விரைந்து சென்று, 55 வயது மதிக்கத்தக்க ஆண், 50 வயது மதிக்கத்தக்க பெண் இருவரின் சடலத்தையும் மீட்டனர். இரண்டு சடலமும் அழுகியும் காணப்பட்டது. உடம்பெல்லாம் கத்திக்குத்துகள் கிடந்தன..

கழுத்து சேலை: கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்ட அடையாளமும் இருந்தது.. கொலை செய்யப்பட்ட பெண்ணின் மார்பில் கத்திக்குத்து இருந்தது... அவரது கழுத்து சேலையால் நெரிக்கப்பட்டிருந்தது. ஆடைகள் அலங்கோலமாக கலைந்திருந்தன.. எனவே, கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இவர்கள் 2 பேருமே எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. தம்பதியா? கள்ளக்காதலர்களா? என்றும் தெரியவில்ல.. எதற்காக யார் கொன்றார்கள் என்றும் தெரியவில்லை..

செருப்பு: ஆனால், முகம் மட்டும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது... அவரது இடது காலில் ஒரு செருப்பும், மற்றொரு செருப்பு சடலத்தின் அருகேயும் கிடந்தது. மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டது.. தடயவியல் நிபுணர்களும் ஸ்பாட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.. அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர்.

செல்போன் சிக்னல்களை வைத்தும் விசாரணை துவங்கியது.. அதன்படி கொலை செய்யப்பட்ட 2 பேரின் படங்களை, தமிழகத்தின் அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தைகள்: இறுதியில், கொலை செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) என்பது தெரியவந்தது.. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

ஆன்லைன் மூலம் டிரேடிங் வியாபாரம் செய்து வந்த இவர்களுக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. அதனால், கோவையில் செயல்பட்ட மை வி 3 என்ற கம்பெனியில் பெருமளவில் முதலீடு செய்து, கடந்த சில மாதங்களுக்கு சுமார் ரூ.40 கோடி முதலீட்டை திரும்பவும் பெற்றுள்ளனர்.

அந்த பணத்தை வைத்து வேறு பிசினஸ் செய்ய திட்டமிட்டனர். அப்போதுதான், தேனியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களிடமுள்ள 40 கோடியில் புதிதாக நிலம் வாங்க முடிவு செய்தனர்.. ஆனால், இவர்களிடம் 40 கோடி ரூபாய் இருப்பது தேவராஜ் கண்ணை உருத்தியது. அதனால், பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு தம்பதிகளுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

தம்பதி: கொடைக்கானலில் நிலம் வாங்கலாம் என்று சொல்லி, தம்பதி இருவரையும் காரில் அழைத்து சென்றுள்ளார் தேவராஜ்.. இதற்கு உடந்தையாக, அஸ்வின் என்ற கார் டிரைவரையும் துணைக்கு வைத்து கொண்டார் தேவராஜ்.. இவர்களை தவிர, தேனியிலிருந்து கூட்டாளிகள் 3 பேரையும் கொடைக்கானலுக்கு வேறு ஒரு காரில் வந்து, தம்பதி செல்லும் காரை மறித்து, 40 கோடி ரூபாய் கேட்டு மிரட்ட சொன்னார் தேவராஜ்.

அதன்படியே 3 கூட்டாளிகளும் தம்பதியை வழிமறித்து, பணம் குறித்து கேட்டனர். ஆனால், தம்பதியினர் தங்களிடம் உள்ள ரூ.40 கோடி பற்றி வாய்திறக்கவேயில்லை.. இதனால் ஆத்திரம் அடைந்த தேவராஜின் 3 கூட்டாளிகளம், தம்பதியை சரமாரி குத்தி சித்ரவதை செய்துள்ளனர். அப்போதும் தம்பதியினர் தங்களிடமிருந்த 40 கோடி ரூபாய் பற்றி வாய் திறக்கவில்லை.

சடலங்கள்: இறுதியில், தம்பதியினரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்கள்.. உடல்களை எங்கு கொண்டு போய் வீசுவது என தெரியாமல் ஒருநாள் முழுக்க காரிலேயே சடலங்களை வைத்து சுற்றித்திரிந்துள்ளனர். இறுதியில், தர்மபுரியில் வீசிவிட்டு போனது தெரியவந்தது. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, தேவராஜ் உள்பட 7 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+