கடைசியாக ஒரு நாள்.. தர்மபுரி லாட்ஜில் கணவன் மனைவி! காலையில் கதவை உடைத்தால் ஷாக்! தருமபுரி கிரைம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரியில் பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி தங்கும் விடுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் கணவனும் மனைவியும் வீடு இருக்கும் போது லாட்ஜில் அறை எடுத்து தங்கியது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தர்மபுரி குண்டால்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அந்த விடுதிக்கு ஒரு இளம் பெண்ணும், ஆணும் வந்து கணவன் மனைவி எனக் கூறி அடையாள அட்டைகளை கொடுத்து தங்கி இருக்கின்றனர்.

இரவு முழுவதும் அறையில் சண்டை போடுவது போல் சத்தம் கேட்ட நிலையில், காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காலிங் பெல்லை அழுத்திய போதும் யாரும் திறக்கவில்லை.

Dharmapuri crime police

கதவை பலமாக தட்டியும் சிறக்காதால் இது தொடர்பாக சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது விடுதியில் தங்கி இருந்த இளம் பெண் உடல் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயங்களோடு இறந்து கிடந்தார். அவருடன் வந்த ஆணும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த லாட்ஜின் பணியாளர்கள் இது தொடர்பாக மதிக்கோன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் பெண்ணும் அவருடன் வந்த ஆணும் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர்கள் இருவரும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதிக்கோன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார், மகாலட்சுமி என்பதும், இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் இருப்பது கண்டறியப்பட்டது.

கொலை வழக்கு ஒன்றில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் சிக்கிய ரமேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தான் சிறை விடுப்பில் குடும்பத்தினரை சந்திக்க ரமேஷ் தர்மபுரிக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் இருவரும் சம்பவம் நடந்த விடுதிக்கு நேற்று முன்தினம் வந்து அறை எடுத்து தங்கி உள்ளனர். மகாலட்சுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு அதற்குப் பிறகு ரமேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஊழியர்கள் மற்றும் ரமேஷ் குமாரின் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தபோது அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஆத்திரத்தில் மகாலட்சுமியை ரமேஷ் குமார் அடித்துக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வழக்கில் சில கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது.

கணவன் மனைவியான இருவர் வீட்டை விட்டுவிட்டு விடுதியில் தங்க என்ன காரணம்? போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் விடுதி ஊழியர்கள் அறை கதவை உடைத்துச் சென்றது ஏன்? எனவும் கேள்வி எழும்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதிக்கோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளை நிற்கதியாக்கிவிட்டு மனைவியை கொன்று கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+