உலகிலேயே முதல்முறை! எல்லாமே ஹைடெக்! ஜில்ஜில் தர்மபுரி! மாற்றி யோசித்த செந்தில்குமார் எம்.பி!
தர்மபுரி: உலகிலேயே முதல்முறையாக சோலார் பேனல் மூலம் ஹைடெக் முறையில் அமைக்கப்பட்டுள்ள 2 அடுக்கு ஏசி பேருந்து நிழற்கூடத்தை தனது தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தர்மபுரி மக்களுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார் செந்தில்குமார் எம்.பி.
சேலம் -பெங்களூர் சாலையில் உள்ள தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வெளிநாடுகளில் உள்ளதை போல் ஒரு அதிநவீன ஏசி பேருந்து நிழற்கூடம் திறக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இதனைக் கட்டிக் கொடுத்துள்ளார்.

இரண்டு அடுக்குத் தளமாக உள்ள இந்த பேருந்து நிழற்கூடத்தில் ஏடிஎம் இயந்திரம், ஏசி வசதி, அதிநவீன இருக்கைகள், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா, சிறப்பு அங்காடி, வர்த்தக விளம்பர எல்.இ.டி.திரை , தாய்மார்கள் பாலூட்டும் அறை, என ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிழற்கூடத்துக்கான டிசைனை பொறியாளராக உள்ள செந்தில்குமார் எம்.பி.யின் நண்பரே வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இதுமட்டுமல்ல மினி நூலகம், தொலைக்காட்சி, எஃப்.எம். வசதி, செல்போன் சார்ஜிங், ஐ லவ் தர்மபுரி என்ற செல்ஃபி ஸ்பாட் என பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்துள்ளார் செந்தில்குமார் எம்.பி. தர்மபுரியின் புதிய அடையாளமாகவே இந்த பேருந்து நிழற்கூடம் மாறிவிட்டது என்று சொல்லலாம்.
திமுக ஆட்சியின் சாதனைகளை இரவிலும் தெரிந்துகொள்ளும் வகையில் மின்னொளி பொருத்தப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் கூட இப்படியொரு அல்ட்ரா மாடர்ன் பேருந்து நிழற்கூடம் இல்லை என்பது தான் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
செந்தில்குமாரை போலவே தமிழ்நாட்டில் உள்ள மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கும் தொகையை வைத்து அதில் பெஸ்டாக என்ன செய்யலாம் என திட்டமிட்டு நலத்திட்டப் பணிகளை செய்ய முன்வர வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications