அட இருப்பா.. பேசிட்டு இருக்கேன்ல.. குறுக்க பேசாத.. இபிஎஸ்ஸை கோபப்படுத்திய அந்த கேள்வி.. பரபர சம்பவம்
தருமபுரி: பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்ட தொண்டரிடம் முதல்வர் பழனிசாமி கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் முழுக்க பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதல்வர் பழனிசாமி ஏற்கனவே திட்டங்களை வகுத்து இருக்கிறார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, பாமக வேட்பாளர்களுக்காகவும் முதல்வர் பழனிசாமி விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் .
இந்த நிலையில் நேற்று தருமபுரியில் நடந்த பிரச்சாரம் ஒன்றில் முதல்வர் பழனிசாமி கோபமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி கேட்டார்
தருமபுரியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்த போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர்.. எங்கள் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. தருமபுரி தொகுதி வறட்சியாக இருக்கிறது. பல காலமாக தருமபுரி வறட்சியாகவே உள்ளது. எங்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.

கோபம்
இதை கேட்ட முதல்வர் பழனிசாமி..அதை பற்றி அப்பறம் பேசுகிறேன்.. அதற்கு அப்பறம் வருகிறேன் என்று கூறினார். ஆனால் கூட்டத்தில் இருந்த தொண்டர் விடாமல் தருமபுரிக்கு என்ன செய்தீர்கள், தருமபுரி ஏன் இப்போதும் வறட்சியாக இருக்கிறது என்று கேட்டார்.

பேசாத!
இதை கேட்டதும் பொறுமையிழந்த முதல்வர் பழனிசாமி.. கோபமாக.. அட இருப்பா.. பேசிட்டு இருக்கேன்ல.. குறுக்க பேசாத.. அதை பத்தி கடைசியாக பேசுவேன் .. இடையில் பேசாதே என்று கோபமாக குறிப்பிட்டார். இதை கேட்டு அங்கிருந்த அதிமுக தொண்டர்களும் கோஷமிட தொடங்கினார்கள்.

இழுத்து சென்றனர்
ஆனால் அதன்பின்பும் அந்த நபர் தொடர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அங்கிருந்து அதிமுக தொண்டர்கள் அந்த நபரை அப்புறப்படுத்தினார்கள். நான்கு பேர் சேர்ந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியே அனுப்பினார்கள்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications