நத்தம் அருகே அதிகாலையில் கேட்ட “சத்தம்”.. 2 பேர் உடல் சிதறி பலி.. எஸ்கேப் ஆன பட்டாசு ஆலை உரிமையாளர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது ஆவிச்சிப்பட்டி. இப்பகுதியில் பூலாமலை அடிவாரத்தில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்த பட்டாசு ஆலையில் வெடி தயாரிக்கும் பணியின்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நத்தம் போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி, வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்
மயிலாடுதுறையில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை.. 2 பேர் பலி.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் நேற்று பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியான நிலையில் நத்தம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications