அடச்சே.. எந்நேரமும் 'இதே' பொழப்பா? கள்ளக்காதலனின் உறுப்பிற்கு தீ வைத்த காதலி.. அலறிய திண்டுக்கல்
ஆண் நண்பரின் மர்ம உறுப்பின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
திண்டுக்கல்: தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த தனது ஆண் நண்பரை பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(38). பெயின்டராக பணியாற்றி வரும் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி(36) எனும் பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் மகேஸ்வரிக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் மகேஸ்வரியின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் மகேஸ்வரிக்கும், முத்துக்குமாருக்கும் இடையேயான தொடர்பு அதிகரித்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக பரிணமித்திருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ள நிலையில், தனக்கு பெரிய பொருளாதார கஷ்டம் இருப்பதாகவும் எனவே இதிலிருந்து மீள தனக்கு உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் இரக்கப்பட்டு 3 பவுன் தங்க நகையையும், கேட்கும் போது தேவையான அளவு பணத்தையும் மகேஸ்வரி கொடுத்திருக்கிறார். ஆனால் இப்படி வாங்கிய நகை மற்றும் பணத்தை திருப்பி கொடுப்பது குறித்து முத்துக்குமார் எதையும் கூறவில்லை.

பாலியல் சுரண்டல்
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மகேஸ்வரி தான் கொடுத்த நகையையும், பணத்தையும் கறாராக கேட்டிருக்கிறார். இதனை எதிர்பார்க்காத முத்துக்குமார் சில நாட்கள் டைம் கேட்டிருக்கிறார். அப்படியும் முத்துக்குமார் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை எழுந்திருக்கிறது. அதேபோல முத்துக்குமாரும் மகேஸ்வரை தொடர்ந்து பாலியல் சுரண்டல் செய்திருக்கிறார். வீட்டில் கணவன் இல்லாமல் தனியாக கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் மகேஸ்வரிக்கு வேறு வழியில் வருமானம் இல்லாததால் தன்னுடைய நகையை திரும்ப பெற்றே தீர்வது என்று உறுதியுடன் இருந்திருக்கிறார்.

மிரட்டல்
அதேபோல நாளுக்கு நாள் முத்துக்குமாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாததாக அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்னையையும் முடிவுக்கு கொண்டு வர முயன்றிருக்கிறார். ஆனால் இது குறித்து பேச முயன்றபோது முத்துக்குமார் மிரட்டல் விடுத்துள்ளார். நகையை திருப்பி தர முடியாது எனவும், என்னுடைய தேவைக்கு நீ இணங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கையில் ஒருரிரு நாட்களுக்கு முன்னர் சி. அம்மாபட்டியிலிருந்து தவசிப்பட்டிக்கு பைக்கில் இருவரும் சென்றுள்ளனர். இந்த பகுதி ஆள் அரவமற்ற வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் முத்துக்குமார் முள் புதருக்கு பின்னால் பைக்கை திருப்பியுள்ளார்.

புகார்
பின்னர் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு மகேஸ்வரியை கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் மகேஸ்வரி மறுக்கவே வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை முத்துக்குமாரின் ஆணுறுப்பின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அலறியபடி ஓடிய முத்துக்குமார் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி ஆகியுள்ளார். அடுத்த நாள் காலையில் இந்த விவகாரம் முத்துக்குமாரின் உறவினருக்கு தெரிய வரவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மகேஸ்வரியை கைது செய்துள்ளனர்.

கைது
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "முத்துக்குமாருடன் தனிமையில் இருந்த நேரத்தில் மகேஸ்வரி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். இதில் முத்துக்குமாருக்கு இடுப்புக்கு கீழ் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. எனவே இதற்கு காரணமான மகேஸ்வரி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications