திண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் தனியார் பேருந்து மோதி இருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் தனியார் பேருந்து மோதி இருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
பழனி அருகே இருக்கும் சத்திரப்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு 8 மணி அளவில் அங்கு தனியார் பேருந்து ஒன்று அதி வேகத்தில் வந்துள்ளது. வேகமாக வந்த அந்த பேருந்து எதிரே வந்த பைக் மீது மோதியது.

இதில் விபத்தில் பைக்கில் வந்த இருவருமே சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இதனால் அங்கு வேகமாக கூடிய மக்கள் பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் அங்கேயே சிறைபிடித்தனர். அதோடு, பேருந்தில் உள்ள மக்களை மொத்தமாக வெளியேற்றி பேருந்தை அடித்து உடைத்தனர்.
அதன்பின் ஆத்திரத்தில் மக்கள் பேருந்துக்கு தீ வைத்து அங்கேயே போராட்டம் நடத்த தொடங்கினார்கள். பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது தெரிந்தவுடன் அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினருக்கும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு போலீசார் தற்போது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அந்த தனியார் பேருந்து எப்போதும் அதிவேகத்தில்தான் செல்லும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மக்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் சத்திரப்பட்டியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications