டெல்லியில் தங்கும் எண்ணமே இபிஎஸ்க்கு இல்லை! திமுக கிளை கட்சி ‘ஓபிஎஸ்’! தடலாடி திண்டுக்கல் சீனிவாசன்!
திண்டுக்கல் : எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நான்கு நாட்கள் தங்கி யாரையும் பார்க்கும் திட்டம் கிடையாது எனவும், எங்களிடம் உடனடியாக திரும்பி வந்து விடுவேன் என கூறித்தான் சென்றார் என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
டெல்லியில் குடியரசு தலைவர் பிரிவு உபச்சார விழாவுக்குச் சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் நேரம் ஒதுக்க மறுத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நான்கு நாட்கள் தங்கி யாரையும் பார்க்கும் திட்டம் கிடையாது எனவும், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," பாரதபிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பார்க்க மறுத்ததாக சொல்கிறீர்கள், நாடே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பொழுது பிடில் வாசித்த கதையாக டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது, பதிவேற்பு விழா நடைபெறுகிறது. அப்பொழுது பிரதமரை பார்த்து பேசி விட்டார். எங்களிடம் உடனடியாக திரும்பி வந்து விடுவேன் என கூறித்தான் சென்றார். அதன்படி நேற்று வந்து விட்டார். பழனிச்சாமி டெல்லியில் நான்கு நாட்கள் தங்கி யாரையும் பார்க்கும் திட்டம் கிடையாது.

மின் கட்டணம்
உதய்மின் திட்டத்தில் அதிமுக அமைச்சர் கையெழுத்து இட்டதன் காரணமாகத்தான் தற்பொழுது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி வருகிறார். இந்த திட்டத்தினை நாங்கள் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் அதன் காரணமாகத்தான் கடந்த 10 வருடமாக தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை

ஓபிஎஸ் அணி
திமுகவின் கிளை கட்சியாக ஓபிஎஸ் அணி செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். எம்ஜிஆர் கூறியது போல் தொண்டன் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் அதன்படி தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான்கு மாதம் கழித்து அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். கட்சி தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடலாம் அரசியல் ஆண்மை இருந்தால் ஓபிஎஸை போட்டியிட சொல்லுங்கள்.

ஓபிஎஸ் கடிதம்
அதிமுகவுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளளார். உச்ச நீதிமன்றம் முதல் எல்லா பக்கமும் கடிதம் கொடுத்துக் கொண்டு வருகிறார். வெற்றி எடப்பாடியாருக்கு வந்து கொண்டே உள்ளது இதுவும் அதுபோல் நல்ல செய்தி வரும். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அதிமுகவினர் மாநில அரசை மட்டுமே குற்றம் சாட்டி வருகின்றனர், மத்திய அரசை குற்றம் சாட்டுவதில்லை என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றமே மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்வோம் அவ்வாறு இல்லை என்றால் யாராக இருந்தாலும் எதிர்ப்போம்" என கூறினார்.












Click it and Unblock the Notifications