திண்டுக்கல் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை! இரவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே, முன்னாள் பாஜக மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன், அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த ராஜாக்காபட்டி ஊராட்சி கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயியான இவர் பாஜக சாணார்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்தவர். விவசாயம், ஆற்று மணல் விற்பனை, லாரி தொடர்பான தொழில்களை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை இரவு ராஜக்காபட்டி அருகில் உள்ள மடூர் பிரிவில் முத்தாலம்மன் பூஞ்சோலை கோவில் என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் பாலகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் சொத்து பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பாலகிருஷ்ணன் என்ன காரணத்தால் கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. சுற்றுவட்டார பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அண்ணன் - தம்பி சொத்து தகராறில் பாலகிருஷ்ணன், ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட்டதால் மற்றொரு தரப்பு கொலை செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்!












Click it and Unblock the Notifications