பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு
பழனி முருகனுக்கு காவடி எடுத்து படியேறி தரிசனம் செய்து வழிபட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் எல். முருகன்.
பழனி: தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இன்றைய தினம் காவடி சமந்து வழிபட்டுள்ளார். பழனி முருகனை வழிபட்ட எல். முருகன், வேல்யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்றதற்காக பழனி முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினார்.
Recommended Video
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான திருஆவினன்குடி எனப்படும் பழனி மலை முருகனுக்கு தான் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக காவடி எடுத்துவந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதுண்டு.

பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி வரும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் அசுரனான இடும்பன் தான். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது குறுமுனியான அகத்தியர் தான்.
காவடி சுமந்து வந்து வேண்டுதல் வைக்கும் பக்தர்களின் கவலைகளை போக்கி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் பழனி தண்டாயுதபாணி. இந்த நம்பிக்கையில் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் கடந்த அக்டோபர் மாதத்தில் பழனி முருகன் கோவிலில் காவடி தூக்கி வந்து முருகனை தரிசனம் செய்தார்.

இதே போல பாஜக மாநில தலைவர் எல். முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்ட ஏராளமானோர் இன்று காவடி சுமந்து வந்து பழனி முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். கந்த சஷ்டி கவசம் சர்ச்சைக்குப் பிறகு பாஜகவினர் வேல் பூஜையை முன்னெடுத்தனர். சஷ்டி திதிகளில் கந்த சஷ்டி கவச பாராயணத்தை முன்னெடுத்தனர்.

பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுபடை வீடுகளிலும் வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த நிலையில் தைப்பூசத்திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துள்ளார் மாநிலத்தலைவர் எல். முருகன்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications