Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் தோட்டத்து வீட்டில் கொல்லப்பட்ட மாரியம்மாள்.. மனசாட்சி உறுத்தியது.. கவுசல்யா வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் வேலை செய்த தம்பதி, அந்த வீட்டின் உரிமையாளரான மூதாட்டியை அடித்துக் கொன்று விட்டு, காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவருடைய மனைவி மாரியம்மாள். இவருக்கு 70 வயது ஆகிறது. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பெரியசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், ஊரின் அருகில் உள்ள தோட்டத்து வீட்டில் மாரியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

Confession of a couple who worked in a Dindigul garden house and killed owner of house

இதனிடையே தன்னுடைய அம்மாவுக்கு துணையாக இருக்கட்டும் என்று அவரது மகன்கள், திண்டுக்கல் கொல்லப்பட்டி ஜி.புதூரை சேர்ந்த ஜெகநாதன் (30), அவரது மனைவி கவுசல்யாவை தோட்டத்தில் தங்க வைத்தனர். அவர்கள் தோட்டத்து வேலை செய்து வந்தனர். இதில் ஒரு வீட்டில் மாரியம்மாளும், மற்றொரு வீட்டில் ஜெகநாதன் தனது குடும்பத்துடனும் வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டில் உள்ள நாற்காலியில் தலையில் பலத்த காயத்துடன் மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த போலீசார் மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஜெகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து எஸ்கேப் ஆனது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஏனெனில் கொலைக்கு ஜெகநாதன் கவுசல்யா தம்பதிக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதனிடையே ஜெகநாதன், தனது மனைவி கௌசல்யா நேற்று காலை ஸ்ரீராமபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியிடம் சரண் அடைந்தனர். அப்போது மாரியம்மாளை, நாங்கள் தான் அடித்துக் கொலை செய்தோம் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார், ஜெகநாதன், அவரது மனைவி கவுசல்யாவை வேடசந்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவுசல்யா போலீசாரிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் மகனும், 5 மாத ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். எங்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருந்ததால் மாரியம்மாளின் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தோம். இங்கு ஆடு, மாடுகள் வளர்த்தும், தோட்டத்து வேலைகளை செய்தும் எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் மாரியம்மாள் எங்கள் மீது அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல அவர் என்னை மிகவும் திட்டியதுடன், கொடுமைப்படுத்த தொடங்கினார். கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால் மிகுந்த மனஉளைச்சல் உள்ளானேன்.

மாரியம்மாளின் செயலை நான் கணவரிடம் கூறினேன். அவரும் மன வேதனை அடைந்தார். ஒருபக்கம் கடன் பிரச்சினையால் துவண்டுபோய் இருந்த எங்களுக்கு, மாரியம்மாளின் பேச்சால் நிம்மதி போனது. இதனால் மரியம்மாளை கொலை செய்ய முடிவு செய்தோம். இரவு மாரியம்மாள் தனது வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது நானும், எனது கணவரும் அவரது வீட்டுக்குள் சென்றோம்.

எனது கணவர் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் மாரியம்மாளின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், அவர் நாற்காலியில் அமர்ந்தபடியே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். காரில் வந்த 4 நபர்கள் அவரை அடித்துக்கொன்று விட்டு நகையை திருடிச்சென்று விட்டனர் என்று நாடகமாடிவிடலாம் என்று திட்டமிட்டோம்.

அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழற்றி தோட்டத்தில் ஒரு இடத்தில் புதைத்தோம். இருப்பினும் எங்களுக்கு மனசாட்சி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இதனால் நாங்கள் விஏஒவிடம் நடந்தைதை கூறி சரண் அடைந்தோம். இவ்வாறு கவுசல்யா போலீசில் கூறினார். இதையடுத்து ஜெகநாதன், கவுசல்யாவை கைது செய்த போலீசார் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகையையும் மீட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+