Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்: அன்று கொடைக்கானல் மலையில் மாவோயிஸ்டுகள்.. இன்று சிறுமலையில் வெடித்து சிதறியது யார்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலாக இருந்த நிலையில் அழிக்கப்பட்டனர்; தற்போது திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலைப் பகுதியில் நடைபெற்ற 'வெடி சம்பவம்' அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல்தான், தென் மாவட்டங்களுக்கான நுழைவாயிலாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான கொடைக்கானல் மலையும், கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான சிறுமலையும் இடம் பெற்றுள்ளன.

dindigul sirumalai

தீண்டுக்கல் மாவட்டத்தில் 1960களில் தீவிர இடதுசாரிகள் இயக்கம் (நக்சலைட்டுகள்) சில பகுதிகளில் ஊடுருவி பண்ணையார்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து 1980களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் அனுமதி பெற்று ஆயுதப் பயிற்சி முகாம் நடத்திய இடங்களில் ஒன்றாக திண்டுக்கல் சிறுமலையும் இடம் பெற்றிருந்தது.

1980களின் பின்பகுதியில் திண்டுக்கல்- குஜிலியம்பாறை சாலையில் உள்ள குளத்தூர் என்ற பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட் நாகராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்தவர் தற்போது ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரியான சைலேந்திரபாபு.

பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுடனான தனித் தமிழ்நாடு கோரிய ஆயுத இயக்கமான தமிழ்நாடு மீட்சிப் படயினரும் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டனர். இந்த இயக்கமும் தடை செய்யப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 2008-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது போலீசா நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதியான நவீன் பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்தான் தற்போது திண்டுக்கல் சிறுமலை பகுதியில் மீண்டும் பயங்கரவாதிகள் நடமாட்டம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. சிறுமலையின் 17-வது கொண்டை ஊசி பகுதியில் அழுகிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது; அந்த சடலம் அருகில் பேட்டரி, வெடிபொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் ஆய்வு நடத்திய போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறின. இதில் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கியூ பிரிவு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. அதிகாரிகள் உள்ளிட்டோர் அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்து ஜெலட்டின் குச்சிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சிறுமலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர், கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த சபுஜான் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சபுஜான், சிறுமலையில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தார்; தமது தோட்டத்தில் இருந்த பாறைகளை தகர்க்க வெடிமருந்துகளை பயன்படுத்திய போது உயிரிழந்தார் என்கிற தகவல் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார், நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் சூழ்ந்துள்ள இந்த சந்தேக மேகங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+