திண்டுக்கல்லில் தேவி கள்ளக்காதலனுக்கு அனுப்பிய வாழ்த்து.. ஒட்டன்சத்திரத்தில் வெறியுடன் ஓடிய கணவர்
திண்டுக்கல்: உயிருக்கு உயிராக நேசித்த மனைவி, இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக கேள்விப்பட்டதுமே அதிர்ச்சியில் உறைந்துள்ளார் கணவர்.. இதனால் மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு பலமுறை அறிவுறுத்தி வந்துள்ளார்.. ஆனால், கணவனின் பேச்சை மீறி மனைவி செயல்பட, இறுதியில் ஒரு உயிரே இன்று பறிபோய்விட்டது.. இது தொடர்பான விசாரணையையும் திண்டுக்கல் மாவட்ட போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒட்டன்சத்திரத்தில் இப்படியொரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள கொசவபட்டி தனுஷ்கோடி காலனியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன்.

இந்த காலனியில் மனைவி தேவியுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வந்துள்ளார்.. ஆனால், தேவிக்கு அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு தகாத உறவில் முடிந்துள்ளது.
திண்டுக்கல் கள்ளக்காதலன்
இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவர் செந்தமிழ்ச்செல்வனுக்கு தெரியவந்தது.. இதனால் ஆவேசமும், ஆத்திரமும் அடைந்த செந்தமிழ்ச்செல்வன், ஸ்டாலினை கொல்வது என்று முடிவெடுத்தார்.
இதற்காக சம்பவத்தன்று, செந்தமிழ் செல்வன், தன்னுடைய மச்சான் மதன்குமார், நண்பர்கள் பிரகாஷ்ராஜ் , பாலன் ஆகியோருடன் சேர்ந்து ஸ்டாலின் வீட்டுக்குள் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தார்.. அங்கே வீட்டில் ஸ்டாலினும், அவரது அப்பா பெரியசாமியும் இருந்துள்ளனர்..
பெரியசாமிக்கும் வெட்டு
கொலைவெறியுடன் நுழைந்த செந்தமிழ்ச்செல்வன் கும்பல், அவர்கள் 2 பேரையும் வெட்டி சாய்த்தது.. ஸ்டாலினுக்கு கழுத்து, கை, முதுகு பகுதியில் சரமாரியான வெட்டுக்குத்து விழுந்தது..
மகனை ஆயுதங்களால் தாக்குவதை பார்த்து பதறிய பெரியசாமி, தடுக்க முயன்றார்.. ஆனால், பெரியசாமிக்கும் சரமாரி வெட்டு விழுந்துள்ளது. முதுகு மற்றும் தொடையில் பெரியசாமிக்கு கத்திக்குத்துகள் விழுந்துள்ளன.. இவர்களை தடுக்க வந்த அவரது தம்பி வெங்கடேஷுக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
அப்பாவும், மகனும் வலியால் துடித்து அலறவும், அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ஆனால் அதற்குள் செந்தமிழ் செல்வனும், அந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.. பிறகு பொதுமக்கள் அம்பிலிக்கை போலீசாருக்கு தகவல் தந்து வரவழைத்தனர்..
சீரியஸ் கண்டிஷனில் பெரியசாமி
விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த தகப்பனையும், மகனையும் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே ஸ்டாலினை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்..
இதையடுதது, பெரியசாமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.. எனினும் அவர் சீரியஸாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஒட்டன்சத்திரம் போலீசார், தப்பியோடிய செந்தமிழ்ச்செல்வன், மதன்குமார், பிரகாஷ் ராஜ், பாலன் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் ஒட்டன்சத்திரத்தில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.
கள்ளக்காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து
கொசவபட்டி தனிஷ்கோடி காலனியில் மர வேலை செய்து வருகிறாராம் செந்தமிழ்ச்செல்வன்.. தேவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததுமே, செந்தமிழ்ச்செல்வன் மனைவியை பலமுறை கண்டித்தாராம்.. ஆனால், தேவி கணவனின் பேச்சை காதிலேயே வாங்கவில்லையாம்..
அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு, ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வந்துள்ளது.. அப்போது தேவி தன்னுடைய செல்போனில் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினாராம்.. இதுதெரிந்துதான், செந்தமிழ்ச்செல்வனுக்கு ஆவேசம் அதிகமாகி, கொலை வரை சென்றுவிட்டாராம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications