பழனி தேவஸ்தானத்தில் நுழைந்த "பாமக".. யாருக்கு மொட்டை அடிக்கறீங்க? திண்டுக்கல் திமுக Vs திமுக? எப்படி
திண்டுக்கல்: திண்டுக்கல் பழநியில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. இது திமுக தரப்பை கடுப்பாக்கி வருகிறது.. என்ன காரணம்?
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 3 கி.மீ. தூரம் உள்ள கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், ஹைகோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்டு, தனியார் வாகனங்கள் நுழைய தடைய விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை தேவஸ்தானம் கையகப்படுத்த முயற்சித்தும் வருகிறது.

மேலும், தனியார் வாகனங்கள் கிரிவலப் பாதையில் நுழைய தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் அடிவாரம் பகுதியில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது...
கவன ஈர்ப்பு : மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுக்கவும், நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும், ஜூலை 13ம் தேதி கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக நகராட்சி கவுன்சிலர்கள், வணிகர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதாவது, திமுகவை சேர்ந்த பழநி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த நகராட்சி திமுக தலைவர் தலைமையிலேயே அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.. இதற்கு அதிமுக, கம்யூ., விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட 33 கவுன்சிலர்கள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, இந்து வியாபாரிகள் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
பேருந்து நிலையம்: அதன்படியே, கடந்த சனிக்கிழமை காலை 6 மணி முதல் துவங்கி, மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடந்தது.. பழநி அடிவாரம், பேருந்து நிலையம், சந்நிதி வீதி, மார்க்கெட் சாலை, திண்டுக்கல் சாலை, ஆர்.எப்.சாலை என நகர் பகுதியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், நகைக்கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் உட்பட மற்ற கடைகளும் அன்றைய தினம் அடைக்கப்பட்டிருந்தன.
பால், மெடிக்கல் ஷாப்கள் மட்டுமே அன்றைய தினம் திறந்திருந்த நிலையில், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்காக பழநி கோயில் நிர்வாகம் சார்பிலேயே உணவு வழங்கப்பட்டது.
சுவாமி தரிசனம்: கிரி வீதி பாத விநாயகர் கோயில், தண்டபாணி நிலையம், வின்ச் ஸ்டேஷன், ரோப் கார் ஸ்டேஷன், சுற்றுலா பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் உணவு, பிஸ்கட் பாக்கெட், பழங்கள், பிரட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கிரிவீதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கோயிலில் 8000 பேருக்கு மேல் அன்னதானம் , குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
திமுகவை எதிர்த்து திமுக தரப்பில் நடத்ததப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்லில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இந்த பரபரப்பு குறையாத நிலையில், இன்னொரு பரபரப்பு அதே பழநியில் கிளம்பியிருக்கிறது.
பாமக கிண்டல்: திமுக நடத்திய இந்த கடையடைப்பு போராட்டம் குறித்து பாமக சார்பில் கிண்டலடித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.. பழநி நகர் பகுதி முழுவதுமே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன..
அதில், "பழநியில் மொட்டை போட்ட வாலிபரை கண்டுபிடித்து தந்தால் சிறப்பு பரிசு என்பது போல் உள்ளது கடையடைப்புப் போராட்டம். பழநி வாழ் பொதுமக்கள் மற்றும் வணிகர்களே உஷாரய்யா... உஷாரு... திமுகவை எதிர்த்து திமுகவா? நகராட்சி தேவஸ்தானத்தை அடிப்பது போல் அடிக்குமாம். தேவஸ்தானம் வலிப்பது போல் நடிக்குமாம்.. இரண்டுமே திமுக அரசு தானே? இதுதான் உங்க திராவிட மாடலா? யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள்?
கொந்தளிப்பு: பழநி முருகனுக்கு வேண்டுதல் வைத்தவர்களுக்கு மட்டும் போடுங்கள் மொட்டை. அறநிலையத்துறையா? நகராட்சி நிர்வாகமா? அடித்து கொள்வது இருவரும்... மிதிபடுவது மக்களும் வணிகர்களும்..." என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் அச்சடிக்கப்பட்டுள்ளன.. இந்த போஸ்டர்கள் திமுக தரப்பினரை கொந்தளிப்புக்குள்ளாக்கி வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications