திண்டுக்கல்லை தட்டி தூக்கும் சிபிஎம்..சச்சிதானந்தத்துக்கு சக்சஸ்! 2ஆம் இடம் யாருக்கு தெரியுமா?
திண்டுக்கல்: மக்களவைத் தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் திண்டுக்கல்லில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் சிபிஎம் வேட்பாளரான சச்சிதானந்தம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக சார்பில் எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் கயிலை ராஜன் ஆகியோர் களமிறங்கினர்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் சிபிஎம் வேட்பாளரான சச்சிதானந்தம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனம் திண்டுக்கல்லில் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சச்சிதானந்தம் சுமார் 40 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முகமது பராக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் அவர் 32 சதவீத வாக்குகளை பெறுவார் எனவும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா 17 சதவீத வாக்குகளை பெற்று, முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடிப்பார்கள் என தெரியவந்துள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளரான கயிலை ராஜனுக்கு மூன்று முதல் ஐந்து சதவீத வாக்குகள் வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 1,812 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. தேர்தலில் 7,80,74 ஆண்கள், 8,26,759 பெண்கள், 218 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 16.07 லட்சம் வாக்காளா்களில், 5,58,829 ஆண்கள் 5,84,311 பெண்கள், 47 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 11,43,187 வாக்குகளார்கள் வாக்களித்தனர்.
திண்டுக்கல் தொகுதியில் தேர்தல்களில் அதிமுகதான் அதிக முறை வென்றிருக்கிறது. 7 முறை அதிமுக, திமுக 2 முறை, காங்கிரஸ் 2 முறை , தமாக 1 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு தேர்தல் தோறும் வெற்றி தேடித்தரும் சின்னமான இரட்டை இலையும் இந்தத் தேர்தலில் தான் களம் இறங்கியது. அதுமுதலே திண்டுக்கல் தொகுதி அதிமுகவுக்கு பல தேர்தல்களில் வெற்றி தேடி தந்துள்ளது. பெரும்பாலும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதியுள்ள இந்தத் தொகுதியில் சிலமுறை கூட்டணியுடன் காங்கிரஸ் வென்றுள்ளது
1989, 1991, 1998, 1999 ஆகிய தேர்தல்களில் முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் இந்த தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதற்குப் பிறகு 1996,2004, 2009 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தமாக மற்றும் காங்கிரஸ் சார்பில் என்எஸ்வி சித்தன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் சிபிஎம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் முதன்முறையாக அக்கட்சி வேட்பாளர் நாடாளுமன்றம் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications