கறிக்கடைக்காரை பார்த்ததுமே.. டக்னு போனை கட் பண்ணிட்டாராம் ஜாஸ்மின்.. திணறுது திண்டுக்கல் வேடசந்தூர்
திண்டுக்கல்: உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் அந்த இளம்பெண்.. அவரை கத்தியால் வெட்டிய கணவரிடம் தீவிரமான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் அரபு அலி.. 30 வயதாகிறது.. இவர் வேடசந்தூரில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் ஜாஸ்மின்..

ஜோதிலட்சுமி என்பது இவரது ஒரிஜினல் பெயர்.. 8 வருடங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
சந்தேகம்: ஜாஸ்மினுக்கு இப்போது 25 வயதாகிறது.. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்வில், திடீரென சந்தேகப்புயல் வீச துவங்கிவிட்டது.. ஜாஸ்மினின் நடத்தையில், அரபு அலிக்கு சந்தேகம் துவங்கியது.. இந்த சந்தேகம் நாளடைவில் வலுக்க துவங்கி, கடைசியில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு வரை வந்துள்ளது.
இந்தநிலையில், நேற்று மதியம் அரபு அலி வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார்.. அவர் வீட்டிற்குள் நுழையும்போது, ஜாஸ்மின் யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.. அரபு அலியை பார்த்ததுமே, டக்குனு போனை கட் செய்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அரபு அலி, ஜாஸ்மினிடம் கேட்டுள்ளார்.. மறுபடியும் தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.
ஆத்திரம்: ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அரபு அலி, ஆடு வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டுவந்து, ஜாஸ்மினின் தலையை அறுத்தார்.. பிறகு, கை, கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ரத்த வெள்ளத்தில் அலறி விழுந்த ஜாஸ்மினை, அக்கம்பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு, முதலுதவி சிகிச்சை மட்டுமே தரப்பட்டது..
விசாரணை: பிறகு, உடனடியாக மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.. இதனிடையே, அரபு அலியை வேடசந்தூர் போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
காதலித்து கல்யாணம் செய்து, மனைவியை அரிவாளாலும் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை வேடசந்தூரில் ஏற்படுத்தி வருகிறது. ஜாஸ்மின் சீரியஸாக இருக்கிறாராம்.. சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது..!!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications