ஈஸ்வரிக்கு ஷேரிங் பிரச்சினை! ரெங்கசாமியை கொலை செய்த கோவிந்தராஜ்! 60 வயசான முதியவர்களின் சபல மோதல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனது மருமகளுடன் முறையற்ற உறவில் இருந்த மாமனார், மருமகள் வேறு ஒருவருடன் பழகியதால் அந்த முதியவரை கொடூரமாக அடித்து கொலை செய்து உடலை எரித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் வெளியாகி உள்ள நிலையில் கிட்டத்தட்ட பல வாரங்களுக்கு பிறகு கொலையாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
குடும்பம் என்பது ஒரு அற்புதமான உணர்வு. தாய், தந்தை, சகோதரர்கள், மாமியார், மருமகள், மாமனார் என அனைவரும் ஒற்றுமையாக பயணிக்கும் போது அந்த குடும்ப உறவுகள் நிறைந்த வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும்.

அதே நேரத்தில் குடும்பத்திற்குள்ளேயே முறையற்ற உறவு சிக்கல்கள் எழுவதும் அது விபரீதத்தில் போய் முடிவதும் என பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்றிருக்கிறது.
மருமகள் மீது கொண்ட ஆசையால் முதியவரை கொலை செய்து சிறைக்குச் சென்று இருக்கிறார் மற்றொரு முதியவர். 30 வயது பெண்ணுக்காக போட்டி போட்டுக் கொண்ட அறுபது வயது முதியவர்களில் ஒருவர் உயிரிழக்க மற்றொருவர் சிறைக்கு சென்றிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இருக்கும் சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான ரெங்கசாமி. 72 வயதான இவருக்கு மகனும் மகளும் உள்ளனர். மனைவி இறந்துவிட்ட நிலையில் ரங்கசாமி தனியே வசித்து வந்திருக்கிறார்.
மகனும் மகளும் கோவையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ரங்கசாமி சேவைக்காரன் பட்டியில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் அவரை காணவில்லை என மகன் யுவராஜா குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி புகார் அளித்தார். புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ரங்கசாமி காணாமல் போனது குறித்து செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வந்துள்ளது.
இந்த நிலையில் இது குஜிலியம்பாறை தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி பண்ணைக்காரன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பாளையம் விஏஓ கலையரசியிடம் அக்டோபர் 20ஆம் தேதி சென்று தான் தான் ரெங்கசாமியை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை அடுத்து கலையரசி காவல்துறையில் தகவல் அளிக்க தொடர்ந்து கோவிந்தராஜை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் ரங்கசாமியை கள்ளக்காதல் தகராறில் அடித்துக் கொலை செய்ததை கோவிந்தராஜ் ஒப்புக்கொண்டார்.

பண்ணைக்காரன் பட்டியில் கோவிந்தராஜ் தனது தோட்டத்து வீட்டில் மகன் வடிவேல் குமார், அவரது மருமகளான ஈஸ்வரியுடன் வசித்து வந்திருக்கிறார். கோவிந்தராஜுக்கும் ஈஸ்வரிக்கும் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த ரங்கசாமிக்கும் கோவிந்தராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கோவிந்தராஜ் வீட்டுக்கு ரங்கசாமியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ரங்கசாமிக்கும் ஈஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் முறையற்ற உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதை அடுத்து ரங்கசாமி தனது வீட்டில் யாரும் இல்லாததால் ஈஸ்வரியை அவரது குழந்தைகள் கணவரோடு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் கோவிந்தராஜ் ரங்கசாமியை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டி இருக்கிறார். அதன்படி கடந்த இரண்டாம் தேதி தனது வீட்டிற்கு ரங்கசாமியை வரவழைத்த கோவிந்தராஜ், மருமகளுடனான கள்ளக்காதல் குறித்து பேசி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ரங்கசாமியை கோவிந்தராஜ் கொடூரமாக தாக்கி சிமெண்ட் தூணில் அவரது தலையை மோத வைத்து தாக்கியுள்ளார். இதனால் ரங்கசாமி இறந்த நிலையில் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்று வரட்டாற்று ஓடையில் எரித்தது தெரிய வந்தது. இதை அடுத்து அங்கும் ஆய்வு நடத்திய குஜிலியம்பாறை போலீசார் கோவிந்தசாமியை கைது செய்துள்ளனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஊரே ஒன்னு சேர்ந்து..செருப்பால் அடிச்சு! என்னங்க நடக்குது இங்க.. திருவிழானாலும் ஒரு நியாயம் வேண்டாமா? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications