இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் 20 நாளில் தற்கொலை! எப்படி மனசு வந்தது? திண்டுக்கல் அருகே துயரம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் 20 நாளில் தற்கொலை செய்து கொண்ட துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாலுக்காக இரண்டு பச்சிளங்குழந்தைகளும் கத்தி கதறியது காண்போரை கண் கலங்கச் செய்திருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் நிர்கதியாக விட்டுவிட்டு அந்தப் பெண் தற்கொலை முடிவை நாடியதற்கு அவரது கணவனே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோமுக கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கவுரி. இவருக்கு வயது 22. இந்நிலையில் கவுரிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன் பலனாக 20 நாட்களுக்கு முன்னர் கவுரி -சிவக்குமார் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று என அழகான இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
இதனிடையே குழந்தை பெற்றெடுத்த பேறுகால களைப்பு தீர்வதற்குள் மனைவி கவுரியிடம் சிவக்குமார் சண்டை போட ஆரம்பித்திருக்கிறார். இன்று காலை கூட கவுரியை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு சிவக்குமார் வெளியே சென்றிருக்கிறார். இதனால் மனமுடைந்த கவுரி தனது இரட்டை குழந்தைகளை விட்டு விட்டு வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இரண்டு குழந்தைகளும் மாறி மாறி கத்தி கதறியபடி அழுததால் அருகாமையில் இருந்தவர்கள் கவுரி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது வீட்டில் கவுரியை காணாதவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடிய போது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார் கவுரி. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிகப்பட்டு அவர்கள் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுரிக்கும் சிவக்குமாருக்கும் திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதை போல் ஆத்திரத்தில் பேசிய பேச்சால் மனைவியை பறிகொடுத்ததோடு தனது இரண்டு இரட்டை குழந்தைகளையும் தாய் இல்லாத பிள்ளைகளாக ஆக்கிவிட்டார் சிவக்குமார். இதனிடையே பாலுக்காக இரண்டு பச்சிளங்குழந்தைகளும் கத்தி கதறியது காண்போரை கலங்க வைத்துவிட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications