Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் ஆண் நண்பருடன் சேர்ந்து தண்ணி அடித்த சித்ரா.. செல்போனை பார்த்து ஆடிப்போன பழநி போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்றாலும், பழகிய நண்பர்களே முதுகில் குத்திய சம்பவம் நிலைகுலைய வைத்துள்ளது.. சித்ரா என்ற பெண்ணிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.. இதில் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தெற்குவீதியை சேர்ந்தவர் சுகுமார்.. 45 வயதான இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.. சில நாட்களுக்கு முன்பு சுகுமாரின் நண்பர்கள் நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45), இருவரும் சுகுமார் வீட்டுக்கு வந்துள்ளனர்.

Dindigul Chitra

அப்போது 3 பேரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள்.. இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த ராணி சித்ரா என்ற 40 வயது பெண்ணும், மது அருந்தியிருக்கிறார். பிறகு 3 பேருமே மது அருந்திவிட்டு சுகுமார் வீட்டிலிருந்து கிளம்பி சென்றுவிட்டனர்.

வலிய வந்த நண்பர்கள்

ஆனால், அடுத்த சில நாளில், சுகுமாருக்கு நண்பர்கள் நாராயணசாமி, துர்க்கைராஜ் இருவரும் போன் செய்துள்ளனர்.. அப்போது சித்ராவுடன் சேர்ந்து மது அருந்தியதை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், ரூ.10 லட்சம் தராவிட்டால் வீடியோவை உன்னுடைய குடும்பத்திற்கும், சோஷியல் மீடியாவிலும் பதிவேற்றம் செய்து விடுவோம் என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகுமார், இதுகுறித்து பழநி டவுன் போலீசில் புகார் அளித்தார்.


பணம் புழங்கும் பிசினஸ்மேன்

இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், நாராயணசாமி, துர்க்கைராஜ் இருவருமே பைனான்ஸ் அதிபர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் என பெரும் பணக்காரர்களை குறி வைத்து மோசடி செய்பவர்கள் என தெரியவந்தது.. பணப்புழக்கம் இருப்பவர்களிடம் வலிய சென்று இருவரும் நட்பு கொள்வார்களாம்.

அதற்கு பிறகு, தங்களுடைய தோழி சித்ராவை, சம்பந்தப்பட்ட பணக்கார நண்பருக்கு அறிமுகம் செய்து வைப்பார்களாம். இந்த நட்புறவை பயன்படுத்தி, மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்வார்களாம்.

அதுபோலவே, சுகுமார் வீட்டில் மதுஅருந்த சென்றபோதும், ராணி சித்ராவை அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.. அனைவரும் மது அருந்தும்போது, ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரியவந்தது.. இதையடுத்து, போலீசார் ராணி சித்ரா, நாராயணசாமி, துர்க்கைராஜ் என 3 பேரையுமே அதிரடியாக கைது செய்தனர்.

யாரிந்த சித்ரா

இதில் கைதான ராணி சித்ராவிடமும் விசாரணை மேற்கொள்ப்பட்டது.. அப்போதுதான், அவர் ஒரு பெண் போலீஸ் என்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. பெண் போலீசாக பணியாற்றி ராஜினாமா செய்துவிட்டாராம்.. திருமணமான ராணி சித்ரா, கணவரை பிரிந்து வாழ்ந்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

பிறகு சித்ராவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் ஏராளமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களின் செல்போன் நம்பர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ராணி சித்ரா எத்தனை பேரை ஏமாற்றினார் என்று தெரியவில்லை.. எனவே, விஐபிகளின் போன் நம்பர்கள் செல்போனில் இருந்ததை வைத்து, ராணி சித்ராவிடம் விசாரணை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+