குடத்தை எடுத்து குத்துங்க.. திண்டுக்கல் சீனிவாசன் குபீர் பேச்சு.. கலகலன்னு சிரித்த பெண்கள்!

முதல்வரை தவறாக பேசினால் குத்து விடுங்கள் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: "யாராச்சும் நம்ம முதல்வரை பத்தி குறை சொன்னால் தண்ணி பிடிக்கிற குடங்களை எடுத்து முகத்துலயே ஒரு குத்துவிடுங்க" என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

நேற்று அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு அவர், "எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தனது இரங்கலை தெரிவித்திருப்பார்... தற்போது நானும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர்... மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது அதிக அன்பு கொண்டவர்... எப்படியென்றால்...." என்று சொல்லி கொண்டே போனார்.

 Dindigul Srinivasan asks to give punch if anybody speaks bad about CM

இதை கேட்டு செய்தியாளர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து கேட்டால் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பற்றி பேசுகிறாரே? என்று குழம்பினர். இதை பார்த்தபிறகுதான் அமைச்சர் சுதாரித்து கொண்டார்.. "ஓ.. நீங்கள் எந்த பாலசுப்பிரமணியத்தை கேட்கிறீங்க? பாடகர் பாலசுப்பிரமணியமா? அவர் ஒரு சிறந்த பாடகர் அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜு போலவே, திண்டுக்கல் சீனிவாசன் ஒரு சர்ச்சை கருத்தை சொல்லி உள்ளார்.. பொதுவாக மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார் திண்டுக்கல் சீனிவாசன்... எதையும் உள்நோக்கத்துடனும், சர்ச்சை தேவை என்பதற்காகவோ பேசமாட்டார்.. வெள்ளந்தி பேச்சுதான் என்றாலும், இவர் வாயை திறந்தாலே அது வைரலாகி விடும் அளவுக்கு சென்று விடும். இதற்கு இந்த 3 வருஷத்தில் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

நேற்றுகூட இவர் பேசியது சர்ச்சையாகி கொண்டிருக்கிறது.. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் திறப்பு விழாவும், சுயஉதவி குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவும் நடந்துள்ளது.

இந்த விழாவில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, "அதிமுக ஆட்சி உண்மையாகவே ரொம்ப நல்லாவே செயல்பட்டுட்டு இருக்கு.. இந்த ஆட்சியை பற்றியோ அல்லது முதல்வரை பற்றியோ யாராவது தவறாக பேசினால் தண்ணீர் பிடிக்கும் குடங்களை கொண்டு முகத்தில் குத்து விடுங்கள்.

பஸ்கள் விட வேணும் என்று பொதுமக்கள்தானே கேட்டார்கள்? 12 மணிக்கு முன்னாடியே கடையை திறக்க வேணும் என்று மதுப்பிரியர்கள்தானே கேட்டார்கள்? இந்த ரெண்டுமே அவங்க விருப்பப்படியே செயல்பட்டுட்டு வருகிறது" என்றார். அமைச்சர் பேச பேச அங்கிருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+