நந்தினிக்கு சீட் தர குவிந்த கல்லூரிகள்.. திண்டுக்கல் சாதனை மாணவி தேர்வு செய்தது எந்த கல்லூரி?
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் நடந்த பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண்களை பெற்ற கூலித் தொழிலாளியின் மகள் நந்தினி எந்த கல்லூரியில் மேற்படிப்பு படிக்க சேர்ந்துள்ளார் தெரியுமா?
தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 9,689 மாணவர்கள், 11 ஆயிரத்து 113 மாணவிகள் என மொத்தம் 20,802 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதில் 8,840 மாணவர்கள், 10,665 மாணவிகள் என மொத்தம் 19,505 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.77 சதவீதம் ஆகும். மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் திண்டுக்கல் மாவட்டம் 21 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி அனைத்து பாடங்களில் 600-க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளார். அதாவது தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
அவர் மாநில அளவில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார். அவர் வணிகவியல் பிரிவு எடுத்திருந்தார். இந்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.
அது போல் தனது வீட்டுக்கு மாணவியையும் அவருடைய குடும்பத்தினரையும் வரவழைத்த அமைச்சர் பெரியசாமி வாழ்த்தி நினைவு பரிசை வழங்கினார். அது போல் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மாணவி நந்தினி அவரிடம் ஆசி பெற்றார். மேலும் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்வதாக முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார்.
நந்தினியின் தந்தை சரவணக்குமார் ஒரு தச்சுத் தொழிலாளி. அவரது தாய் பானுப்பிரியா இல்லத்தரசி. திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நந்தினி 10 ஆம் வகுப்பில் 491 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசாக கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி திண்டுக்கல்லில் மாணவியை அவருடைய வீட்டில் சந்தித்த வைரமுத்து தங்க பேனாவை கொடுத்தார். அது போல் நிறைய தன்னார்வலர்கள் மாணவிக்கு கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி நந்தினி எந்த கல்லூரியை தேர்வு செய்வார் என்ற கேள்வி எழுந்தது.
அந்த வகையில் அவருக்கு சீட் கொடுக்க நிறைய கல்லூரிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கோவை பிஎஸ்ஜி கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இந்த கல்லூரி நிர்வாகம் அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும் நந்தினி தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications