துபாய் எக்ஸ்போ-2020.. கட்டுமானத்தின் போது 3 பேர் உயிரிழப்பு, 70 பேர் படுகாயம்.. ஷாக் தரும் தரவுகள்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் எக்ஸ்போ- 2020 நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், இதன் கட்டுமான பணியின் சமயத்தில் ஏற்பட்ட விபத்துகளில் மொத்தம் 3தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் 70 பேர் காயமடைந்ததாகவும் எக்ஸ்போ-ஐ திட்டமிட்ட குழு அறிவித்துள்ளது.

பிரமாண்டமான துபாய் எக்ஸ்போ-2020 நேற்று முன்தினம் துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பங்கேற்றுள்ளன.

இந்த எக்ஸ்போ மூலம் பல சர்வதேச முதலீடுகள் அங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் எக்ஸ்போ

துபாய் எக்ஸ்போ

இதற்கான பிரத்தியேக வளாகத்தைக் கட்டும் பணிகள் கடந்த 2019இல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கட்டுமான பணிகளுக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். சுமார் 247 மில்லியன் மணி நேர மனித உழைப்பின் மூலம் இந்த பிரத்தியேக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணியின் போது பல விபத்துகள் நடந்துள்ளதாகவும் கொரோனா வழிகாட்டுதல்கள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்துக் கொண்டு, மிரட்டி வேலை வாங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம்


இதனால் கட்டுமான பணிகளின் போது நடந்த விபத்துகள் குறித்த தகவல்களை அமீரக அமீரகம் வெளியிட வேண்டும் என்று பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், வித்து குறித்த தகவல்களை வெளியிடுவதில் அமீரக அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்த தகவல்களை வெளியிடவில்லை என்றால் துபாய் எக்ஸ்போ-இல் பங்கு பெறப் போவதில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இது தொடர்பாகச் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், கடைசியாக விபத்து குறித்த தகவல்களை இந்த எக்ஸ்போ அறிவித்துள்ளது.

3 பேர் பலி

3 பேர் பலி

இது தொடர்பாக அந்த எக்ஸ்போ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எக்ஸ்போ கட்டுமான பணிகள் நடைபெற்ற போது துரதிருஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல இது வரை 72 பேர் இதில் காயமடைந்தனர். கட்டுமான பணிகளின் போது தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கே உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 247 மில்லியின் மனித உழைப்பு நேரம் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த எக்ஸ்போ கட்டுமான சமயத்தில் உலகத் தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கடைப்பிடிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டில் கட்டுமான பணிகளின் போது ஏற்படும் விபத்துகளை விடக் குறைவான விபத்துகளை இந்த எக்ஸ்போ கட்டுமானத்தில் நடந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

தகவல் இல்லை

தகவல் இல்லை

துபாய் 2020 எக்ஸ்போ கட்டுமான பணியின் போது மொத்தம் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதை அந்த அமைப்பே உறுதி செய்துள்ள போதிலும், விபத்து குறித்தோ அல்லது விபத்தினால் உயிரிழந்தோரின் விவரங்கள் குறித்த தகவல்களை வெளியிட மறுத்து விட்டார். அதேபோல இந்த எக்ஸ்போ-ஐ புறக்கணிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள போதிலும், பிரான்ஸ் இந்த எக்ஸ்போ-இல் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து தொடரையும் ஐக்கிய அமீரகம் கத்தாருடன் இணைந்து அடுத்தாண்டு நடத்தவுள்ளது. இதன் கட்டுமான பணிகளின் போதும் தொழிலாளர் நலன் மற்றும் மனித உரிமைகள் மீறப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளும், அடுத்து விரைவில் தொடங்கும் உலகக் கோப்பை டி 20 தொடரும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+