அக்கவுண்டுக்கு வரும் 28 ஆயிரம்..அரசு பள்ளி மாணவர்கள் டார்கெட்! உஷார் பெற்றோர்களே.. அரசின் வார்னிங்!
திண்டுக்கல்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி வங்கிக் கணக்கு எண்ணை பெற்று மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மோசடி தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
எல்லாம் டிஜிட்டல் மயமாகி போய்விட்ட இந்த ஆன்லைன் யுகத்தில் தற்போது மோசடிகளும் நாளுக்கு நாள் பல்வேறு விதங்களில் அரங்கேறி வருகிறது. "கார்ட் மேலே 16 நம்பர் சொல்லு சார்" கும்பல் தற்போது வித்தியாச வித்தியாசமாக யோசித்து பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வருகிறது.

வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் தொடங்கி, ஆன்லைன் கிப்ட் மோசடி, உணவு டெலிவரி மோசடி என பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து மோசடி கும்பல் அப்பாவி படிக்காத பெற்றோர்களிடம் பணத்தை பறித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு வங்கி கணக்கு பள்ளிகளிலேயே தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக பெற்றோர்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அரசு தரும் உதவி தொகை அந்த கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே அதற்கான பணிகளில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு உதவி தொகைக்காக காத்திருக்கும் பெற்றோர்களை குறி வைத்து மோசடி கும்பல் பணத்தை திருடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெற்றோரை தொடர்பு கொண்ட கும்பல்," நான் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன்.. தங்கள் மகனுக்கு அரசு தரும் 28 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக உங்கள் வங்கி கணக்கை சரி செய்ய வேண்டும்" எனக் கூறியிருக்கின்றனர்.
வங்கி கணக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.. அதில் நாங்கள் அடிக்கடி பணம் போட்டு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என பெற்றோர்களும் வெள்ளந்தியாக பேச நான்காயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் தான் உதவித்தொகை கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் உங்கள் கணக்கில் நிறைய பணம் இருப்பது போல தெரிகிறது.. அந்த பணத்தை தற்போது மாற்ற வேண்டும் எனக் கூறி உள்ளனர்.
இதனை நம்பிய பெற்றோர் அவர்களின் வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்டவற்றை தந்திருக்கின்றனர். இதை அடுத்து மோசடி கும்பல் அவர்களை வங்கி கணக்கிலிருந்து சுமார் 10,000 ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு இதே பாணியில் பண மோசடி நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அந்த நேரத்தில் சற்று நிதானம் இழக்கும் நபர்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளில் நடக்கும் இறை வணக்க கூட்டத்தில் இது போன்ற மோசடிகள் குறித்து மாணவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதில்,"திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் அரசு/அரசு உதவி பெறும்/தனியார் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி வாரிய அலுவலர் என்ற பெயரில் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு போதிய படிப்பறிவு இல்லாத பெற்றோர்களிடம் வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எனவே அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளிடம் காலை இறைவணக்கக் கூட்டத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications