திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர்..வெடித்து சிதறியதில் புதுமாப்பிள்ளை பலி..சதி செயலா? போலீஸ் விசாரணை
ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் திருமணத்துக்கு வந்த பரிசுப்பொருட்களை புதுமாப்பிள்ளையும் அவரது சகோதரரும் பிரித்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஹோம் தியேட்டரை பிரித்து பார்க்கும் போது திடீரென ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியது. இதில் புதுமாப்பிள்ளையும் அவரது சகோதரரும் பலியாகியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஷ்கர் மாநிலத்தின் கபிர்தம் மாவட்டத்தில் ஷமாரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஹேமேந்திர மேராவி (வயது 22).
ஹேமேந்திர மேராவிக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தடல் புடலாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு உறவினர்கள் பலரும் வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.

பரிசாக வந்த ஹோம் தியேட்டர்
அப்போது பல பரிசு பொருட்களையும் உறவினர்கள் கொடுத்து இருந்தனர். திருமண நாள் அன்று வாங்கிய இந்த பரிசுபொருட்களை புதுமாப்பிள்ளையான ஹேமேந்திர மேராவியும் அவரது சகோதரரான ராஜ்குமார் என்பவரும் பிரித்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஹோம் தியேட்டர் ஒன்றும் திருமண கிஃப்ட் ஆக வந்திருந்ததை பார்த்தனர். அந்த பார்சலையும் பிரித்த ஹேமேந்திர மேராவி அது சரியாக இயங்குகிறதா? என்று பரிசோதித்து பார்த்து இருக்கின்றனர்.

மாப்பிள்ளை பலி
அப்போது பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியது. ஹோம் தியேட்டர் வெடித்ததில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மாப்பிள்ளையான ஹேமேந்திர மேராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனிறி அவரும் உயிரிழந்தார். ஹேமேந்திர மேராவியின் வீட்டில் இருந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

ஹோம் தியேட்டர் எதனால் வெடித்தது
திருமணத்திற்க்கு கிப்ட் ஆக வந்த பொருள் வெடித்து சிதறியதில் புதுமாப்பிள்ளை பலியானது அப்பகுதியில் பெரும் பரபரபை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வெடித்து சிதறிய பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். அதை ஆய்வுக்கு பிறகே ஹோம் தியேட்டர் எதனால் வெடித்தது என்பது குறித்த காரணங்கள் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பெரும் சதித் திட்டமா?
இதனிடையே, வெடிமருந்து வாடை அடித்ததாகவும் இதனால், இந்த சம்பவத்தில் பெரும் சதித் திட்டம் இருக்கும் என மாப்பிள்ளையின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால், போலீசார் அந்த கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எனினும், இதில் எதுவும் சதிச்செயல் இருக்குமா? என்று உறுதி செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

உரிய விசாரணைக்குப் பிறகு
இன்னும் ஒரிரு தினங்களில் ஹோம் தியேட்டர் வெடித்ததற்கு உண்மையான காரணம் என்ன என்ற ஒரு தெளிவான விவரம் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர். மேலும் வீட்டில் வெடி விபத்தை ஏற்படுத்துவதற்கான வேறு எந்த ஒரு பொருளும் இல்லை என்றும் ஹோம் தியேட்டர் மட்டுமே வெடித்து சிதறியிருப்பதாகவும் உரிய விசாரணைக்குப் பிறகு ஹோம் தியேட்டர் எதனால் வெடித்தது என்ற விவரம் தெரிய வரும் என்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications