ஓட்டு போட லீவு விட்டா..என்னய்யா பண்ணி வச்சுருக்கீங்க..! 100% புக் ஆன ரூம்கள்! கொடைக்கானல் ரொம்ப பிசி!
திண்டுக்கல்: நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓட்டுப்பதிவிற்காக அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் அனைத்து ஹோட்டல் அறைகளும் 100 சதவீதம் புக் ஆகியிருப்பது 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை அடைய தடையாய் மாறியிருக்கிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-வது வாரத்தில் கோடைமழை பெய்யும். சித்திரையும், குளு, குளு சீசனும் ஒன்றாக தொடங்கும். அந்த வகையில் தற்போது, கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியிருக்கிறது.

ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். பொதுவாகவே வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
கொடைக்கானல்: இரு தினங்களுக்கு முன்பு கூட பெருமாள் மலையை தாண்டி சுமார் 10 கி.மீ. துரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு வரும் ஏப். 19ம் தேதி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏப்.19 ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அடுத்தடுத்த நாட்களான சனி, ஞாயிறும் விடுமுறை தினங்கள் தான். இதனால், ஒரு சேர 3 நாட்கள் கிடைப்பதால் எல்லோரும் சுற்றுலா பயணத்திற்கு தயாராகி வருகின்றனர்.
100% வாக்குப் பதிவு: அரசு 100 சதவீத ஓட்டளிப்பை உறுதிப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 85 க்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே அஞ்சல் ஓட்டு, பத்திரிக்கையாளர்கள், போலீஸ், அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் ஓட்டு என அனைத்து வகைகளிலும் அனைவரையும் ஜனநாயக கடமையாற்ற வைக்க மெனக்கெட்டு வருகிறது.
சுற்றுலா செல்லும் மக்கள்: ஆனால், பலர் அதனை பற்றி கவலைப்படாமல் டூர் ப்ளான் செய்துள்ளனார். குறிப்பாக, வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் படையெடுக்க தயாராகியிருக்கின்றனர். ஓட்டு போட செல்கிறோம் என ஏப்.18 ம் தேதியே விடுமுறை பெறும் இவர்கள் ஏப். 18 ம் தேதி மாலை கொடைக்கானலில் தஞ்சம் புக இருக்கின்றனர். அன்று முதல் ஏப்.19, 20, 21 என 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட இருக்கின்றனர். கொடைக்கானலில் உள்ள அனைத்து ஓட்டல்களின் அறைகளும் ஏப்.18 ம் தேதி முதலே 'புக்' செய்யப்பட்டிருக்கிறது.
ரொம்ப பிசி: இதனை அரசு தடுக்க வேண்டியது கட்டாயம்.. ஓட்டுப் பதிவிற்கு பின்புதான் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது ஓட்டளிக்கும் போது வைக்கப்படும் மை இருக்கிறதா என்று சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். இல்லையேல், ஓட்டு சதவீதம் குறைவதை தடுக்க வாய்ப்பில்லை. மாற்று ஏற்பாடு என்பது கட்டாயம். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்களிடம் பேசிய போது, வழக்கமாக கொடைக்கானல் கோடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.. ஆனால் தேர்தல் காரணமாக தொடர் விடுமுறையால் இந்த முறை வழக்கத்தை விட புக்கிங் அதிகமாக இருப்பதாகவும், வீடுகள் கூட தற்காலிக ஓட்டல் அறைகளாக மாறியிருப்பதாக கூறுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications