20 வயது சுஷ்மிதா.. 9 மாத கர்ப்பிணி.. நாய் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி.. கொடுமைக்கார கணவன்!
Recommended Video
திண்டுக்கல்: 9 மாத கர்ப்பிணியை நாய் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் கணவன்.. எல்லாம் நாசமாபோன கள்ளக்காதலுக்காகத்தான்!
திண்டுக்கல் வேடசந்தூர் வசந்தநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். தனியார் மில் தொழிலாளி. இவருக்கு 2 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. மனைவி பெயர் சுஷ்மிதா.. 20 வயதாகிறது இப்போது, சுஷ்மிதா 9 மாச கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், கவுண்டச்சிபட்டியில் உள்ள தனது, மாமனார், மாமியாரை பார்ப்பதற்காக, ஒரு பையில், பழங்களை வாங்கிக் கொண்டு நேற்று முன்தினம் காலை வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் சுஷ்மிதா. அப்போது, சில மர்மநபர்கள் இவரை வழிமறித்து உள்ளனர்.

தினேஷ்குமார்
சுஷ்மிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியையும் பறிக்க முயன்றபோது, அவர்களை சுஷ்மிதா தடுக்கவும் ஆத்திரத்தால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே சுஷ்மிதா இறந்துவிட்டார். பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய தினேஷ்குமார் மனைவியை காணாமல் அவரை தேடி வயலுக்கு சென்ற போதுதான், காயங்களுடன் சடலமாக கிடந்த சுஷ்மிதாவை கண்டு அலறினார்.

கள்ளக்காதலி
5 மணி நேரம் கழித்துதான் சுஷ்மிதாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால், வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துவிட்டது. கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ மணிமாறனின் உறவினர் ஆவார். இந்த சம்பவம் தமிழக மக்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணையில் இறங்கியபோதுதான் தெரிந்தது, இது ஒரு கள்ளக்காதல் சம்பந்தமாக நடந்த கொலை என்று.

கண்டிப்பு
தினேஷ்குமாருக்கு பாண்டீஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ள உறவு... இந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த விஷயம் தெரிந்துபோய் சுஷ்மிதா கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் கணவர் காதலியை விடவில்லை. இந்த சமயத்தில் சுஷ்மிதா கர்ப்பமாகவும், "நமக்கு தான் ஏற்கனவே 2 குழந்தைங்க இருக்காங்களே.. இந்த குழந்தை எதற்கு" என்று காதலனை உசுப்பேத்தி விடவும், மனைவி, மற்றும் சிசுவை கொல்ல முடிவு செய்தார் தினேஷ்குமார்.

உல்லாசம்
இந்நிலையில், பாண்டீஸ்வரியின் தங்கைக்கு தினேஷ்குமாரின் தம்பியை கல்யாணம் செய்வது குறித்து பேச வேண்டும் என்று சொல்லி மனைவியை அழைத்து சென்றுள்ளார். பாண்டீஸ்வரியின் வீட்டுக்கே மனைவியை அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, பாண்டீஸ்வரி மகளுடன் சுஷ்மிதா பேசி கொண்டிருந்த சமயம், இன்னொரு ரூமில், தினேஷ்குமாரும் பாண்டீஸ்வரியும் ஜாலியாக இருந்துள்ளனர். இதை கண்ணெதிரே சுஷ்மிதா பார்த்துவிடவும் ஆவேசமும், அதிர்ச்சியும் அடைந்தார்.

நாய் பெல்ட்
இதனால் கள்ளக்காதலர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர். உடனே கீழே கிடந்த நாய் கழுத்தில் கட்டும் பெல்ட்டை எடுத்து சரமாரி அடித்துள்ளார் கணவன். அதே பெல்ட்டில் கழுத்தையும் நெரித்து கொன்றுள்ளார். ஆனால் கழுத்தில் எந்தவித அடையாளமும் தெரியாத மாதிரி கொன்றுள்ளார். பிறகு தோட்டத்து பகுதியில் சடலத்தை போட்டு, கழுத்தில் இருந்த சங்கிலியையும் எடுத்து கொண்டு போய் கள்ளக்காதலியின் அம்மாவிடம் தந்துள்ளார்.

விசாரணை
இதற்கு பிறகுதான் மனைவியை காணோம் என்று தேடுவது போல நடிக்க ஆரம்பித்தார். இவ்வளவு விஷயங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார் தினேஷ்குமார். சுஷ்மிதா கழுத்தில் நகை மட்டும் காணாமல் போன நிலையில், காதில் கம்மல் இருந்தது, கொலுசு இருந்தது, செல்போனும் அங்கேயேதான் இருந்தது. திருட வந்தவர்கள் இவ்வளவையும் விட்டுச்சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்ற சந்தேகத்தில்தான் கணவனை பிடித்து விசாரித்தனர். இப்போது, கணவன் மற்றும் கள்ளக்காதலி குடும்பத்தினரிடம் விசாரணை நடக்கிறது.


Click it and Unblock the Notifications
