நானில்லை.. சிவன் கூப்பிடுறாரு வா.. காளிமாதா பவித்ராவுக்கு செக்ஸ் தொல்லை.. ஆண் சாமியார் மீது புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவயோகி திருஞானம் எனும் சாமியார் தான் சிவன் என கூறிக் கொண்டு எனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக காளிமாதா பவித்ரா போலீஸில் புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் பவித்ரா. இவர் தன்னை காளிமாதாவின் அவதாரம் என கூறிக் கொண்டு ஆசிரமம் நடத்தி வருகிறார்.

முகத்தில் மேக்கப், கழுத்தில் சிவலிங்க டாலர், கழுத்து நிறைய நகைகள், கழுத்தில் மாலை, சால்ட் பெப்பர் போல் கோல்ட் பெப்பர் நிறத்தில் தலைமுடி, உதட்டில் லிப்ஸ்டிக்

சுடிதார்

சுடிதார்

அவர் அணிந்திருக்கும் உடை கூட அம்பிரல்லா கட்டிங் சுடிதார்தான். கலர் கலராக அணிந்து கொண்டிருப்பார். தன்னிடம் வந்து ஆசி பெற்றதால்தான் ஓ பன்னீர் செல்வம் முதல்வரானதாகவும் தன்னை வரவேற்காததால்தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை இழந்ததாகவும் கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

நில மோசடி வழக்கு

நில மோசடி வழக்கு

இந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் நில மோசடி வழக்கில் தவயோகி திருஞானம் என்பவர் பவித்ரா மீது புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் பேரில் பவித்ரா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார்.

சாமியார் அல்ல

சாமியார் அல்ல

அந்த புகாரில் நான் சாமியார் அல்ல. இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு செல்லும் தர்மாச்சாரியா. பல்வேறு முதல்வர்கள், அவர்களுடைய உறவினர்கள், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்கள் என்னிடம் ஆசி பெற வருகிறார்கள். தவயோகி சிவஞானம் எனும் போலி சாமியார் என்னை ஏமாற்றி பண மோசடி செய்த நிலையில் புலித்தோல், மான்தோல், மயில் தோகைகள், போதை பொருள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார்.

மயில் ரத்தம்

மயில் ரத்தம்

நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக மயிலின் ரத்தத்தை குடித்து வருகிறார். மேலும் என்னிடம் அவர் சிவன் என கூறிக் கொண்டு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் தவயோகியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி டிஜிபி அலுவலகத்தில் அமர்ந்து பவித்ரா போராட்டம் நடத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+