முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்!
மதுரை: நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதல் தீவிரவாதி ஒரு இந்து என தான் கூறியது சரித்திர உண்மை என மீண்டும் உறுதியாக கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சி காவல் நிலையத்திலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
கமலின் பேச்சைக் கண்டித்து அவருக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டிற்கும் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இன்று பிரச்சாரம்
அதே நேரத்தில் கடந்த 2 நாட்களாக நடிகர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்களும் பாதுகாப்பு காரணம் கருதி ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று திட்டமிட்டப்படி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என தெரிவிக்கப்பட்டது.

மதுரைக்கு புறப்பாடு
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக கொடைக்கானலில் இன்று இருந்து மதுரைக்கு கமல்ஹாசன் சென்றார்.

சரித்திர உண்மை
மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கோட்சே குறித்த பேச்சுக்கு விளக்கமளித்த அவர், நான் பேசியது சரித்திர உண்மை. முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை. உண்மையே வெல்லும் என்றார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications