கொடைக்கானல் காளான்கள் மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம்.. அன்னைதெரசா பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. அவற்றில் 300 வகையான காளான்களை கடந்த 6 ஆண்டுகளாக அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை தலைவரான உஷா ராஜநந்தினி ஆய்வு நடத்தி வருகிறார். அவர் லேடி போரஸ், வெர்சிஸ் போரஸ் என்ற ஈஸ்டர் காளான்களும், ரசுல்லா பராசூரியா- பைன் உள்ளிட்ட காளான்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார். அதில் காளான்கள் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்,
திண்டுக்கல் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் அமைந்துள்ள அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை தலைவரான உஷா ராஜநந்தினி என்பவர் இருக்கிறார். இவர் கடநத் 2018-ம் ஆண்டு முதல் இவரது தலைமையில் மாணவிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் காளான்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

காளான்கள் குறித்து உஷா ராஜநந்தினி கூறுகையில், கொடைக்கானல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான காளான் வகைகள் உள்ளன. அவற்றில் 300 வகையான காளான்களை கடந்த 6 ஆண்டுகளாக கண்டறிந்து சேகரித்தோம். பின்னர் அதனை பதப்படுத்தி வகைகள், பயன்பாடுகள் மற்றும் குணாதிசியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தோம்.
இதில் லேடி போரஸ், வெர்சிஸ் போரஸ் என்ற ஈஸ்டர் காளான்களும், ரசுல்லா பராசூரியா- பைன் உள்ளிட்ட காளான்கள் அதிக சுவைகொண்டதாகவும், உணவாக உண்ணக்கூடியவையாகும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி, புரத சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது. தற்போது விலங்குகளில் உள்ள செல்கள் மீது அதனை செலுத்தி சோதனை செய்ததில் புற்றுநோயை தடுப்பதற்கும், அதனை குணப்படுத்தவும் முடியும் என்று கண்டறிந்துள்ளோம். இதுகுறித்து புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மனித உடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கு மேக்ரோலெபியோட்டா என்று அழைக்கப்படும் கோழி காளான் அல்லது குடை காளானில் இருந்து மருந்து கண்டுப்பிடித்து காப்பீட்டு உரிமம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் புற்றுநோயை காளான்கள் மூலம் குணப்படுத்துவதற்கு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தயாரிப்பதற்காக மருந்து கம்பெனிகள் முன் வந்தால் அவர்களுடன் இணைந்து துணைவேந்தர் அனுமதி உடன் அதனை தயாரிப்பதற்கு தொழில் நுட்ப உதவிகள் செய்து தரப்படும்" இவ்வாறு உஷா ராஜநந்தினி கூறினார்.
பொதுவாகவே பொரிடின் காளான்கள் அல்லது போரஸ் காளான்கள் பற்றிய ஆராய்ச்சிகளில், அவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கக்கூடும் என்ற முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்தக் காளான் கூட்டுப் பொருட்களின் முதன்மைச் செயல்பாடு புற்றுநோய் செல்களை நேரடியாகக் கொல்லுவதை விட, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. PSK மற்றும் PSP ஆகியவை இயற்கையான கொலையாளி செல்கள் (Natural Killer Cells), T செல்கள் மற்றும் பிற நோயெதிர்ப்புச் செல்களைத் தூண்டி, உடலின் புற்றுநோய் செல்களைத் தாக்கும் திறனை மேம்படுத்துகின்றதாம்.
என்னதான் காளான்கள் மற்றும் அவற்றின் சேர்மங்கள் புற்றுநோய்க்கான சிகிச்சையில் துணைப் பொருளாக செயல்படக்கூடும் என்று ஆய்வுகள் கூறினாலும், இவை நவீன மருத்துவச் சிகிச்சை முறைகளான கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சைக்கு மாற்றாக உள்ளதாக இன்னும் வளரவில்லை.. எனவே இந்தக் காளான் துணைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன், புற்றுநோய் நிபுணரிடம் அல்லது மருத்துவ ஆலோசகரிடம் பேசுவது மிக அவசியம் அவசியம். மருத்துவ குறிப்புகள் என்பது தகவல் மட்டுமே. முழுமையாக அறிய மருத்துவரை நாடுவது நல்லது.












Click it and Unblock the Notifications